Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஃபஹத், நஸ்ரியாவுக்கு திருமணம் நடக்க நான் தான் காரணம்: நித்யா மேனன்
சென்னை: நஸ்ரியாவுக்கும், ஃபஹத் ஃபாசிலுக்கும் திருமணம் நடக்க நான் தான் காரணம் என்கிறார் நடிகை நித்யா மேனன்.
அஞ்சலி மேனன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் உள்ளிட்டோர் நடித்த மலையாள படமான பெங்களூர் டேஸ் இன்றும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று.
அந்த படம் குறித்து நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது,
பெங்களூர் டேஸ் படத்தில் திவ்யாவாக நடிக்குமாறு இயக்குநர் அஞ்சலி மேனன் என்னிடம் தான் முதலில் கேட்டார். என்னால் நடிக்க முடியாத சூழல். அதனால் மறுத்துவிட்டேன். அதன் பிறகே அந்த கதாபாத்திரம் நஸ்ரியாவுக்கு சென்றது.
மேக்கப் ரூமில் படித்து 10ம் வகுப்பு தேர்வில் 93% மதிப்பெண் வாங்கிய நடிகை
பின்னர் நடாஷா பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டார் அஞ்சலி. அந்த கதாபாத்திரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்றதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். எல்லாம் நன்மைக்கே நடந்தது. அந்த படத்தில் நடித்தபோது தான் ஃபஹத், நஸ்ரியா இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
நான் திவ்யாவாக நடிக்க மறுத்ததால் தான் உங்களுக்கு கல்யாணம் நடந்தது என்று நான் ஃபஹத், நஸ்ரியாவிடம் அடிக்கடி கூறுவேன் என்றார்.