வைர வியாபாரி பார்ட்டியில் ஆட்டமா?: சன்னி லியோன் மறுப்பு
மும்பை: மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைர வியாபாரி கொடுத்த பார்ட்டியில் நடிகை சன்னி லியோன் நிர்வாணமாக நடனம் ஆடியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சன்னி மறுத்துள்ளார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி கோலிவுட்டிலும் துரை தயாநிதி தயாரிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைர வியாபாரி ஒருவர் கொடுத்த பார்ட்டியில் சன்னி லியோன் கலந்து கொண்டு நிர்வாணமாக ஆடியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அப்படி நிர்வாணமாக ஆட அவர் ரூ.40 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சன்னியோ இதை மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஏப்ரல் 18ம் தேதி நான் டீனா அன்ட் லோலோ படப்பிடிப்பில் இருந்தேன். அன்று இரவு ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். பொய் செய்தியை வெளியிடும் முன்பும் கொஞ்சம் உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











