ஈர உடையில்.. சட்டை பட்டனை கழட்டிவிட்டு விவகாரமாக போஸ் கொடுத்த அமலா பால்!
சென்னை : நடிகை அமலா பால் சொட்ட சொட்ட நனைந்த படி ஈர உடையில் விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார்.
நடிகை அமலா பால், நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார்.
பின் தமிழில் மாமனாரை காதலிக்கும் ஒரு விவகாரமான கதை களத்தைக்கொண்ட சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

நடிகை அமலா பால்
மைனா படத்திற்கு பின் தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி என தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களான விக்ரம், தனுஷ், விஜய், சித்தார்த், அதர்வா, விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இருவரும் பிரிந்தனர்
விஜய்யுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அமலா பால், திருமணத்திற்குபின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனால், திருமணமான இரண்டு வருடத்திலேயே இவர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

கைவசம் உள்ள படங்கள்
விவாகரத்துக்கு பின் சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக கடாவர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒடிடியில் நேரடியாக வெளியாகி பாராட்டை பெற்றது. தற்போது இவர் கிறிஸ்டோபர், ஆடுஜீவிதம் என்ற மலையாளப்படத்திலும், இந்திப்படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளார்.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், ஈரம் சொட்ட சொட்ட நனைந்து, சட்டை பட்டனை திறந்துவிட்டு விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக "Love at first sight, nice meeting you again beauty" என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் love at fist sight ஆ என்றும், ஏதோ சொல்லவரீங்க என்றும் போட்டோவுக்கு லைக்குகளை மலைபோல குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











