நித்யானந்தா மீது எனக்கு கிரஷ்..திருமணம் செய்ய ஆசை..நடிகை பிரியா ஆனந்தின் விபரீத பேட்டி!

சென்னை : நித்யானந்தா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி என பல குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி தலைமறைவாகி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

கைலாசாவில் இருந்து தினமும் வீடியோக்கள் வந்தாலும், கைலாசா எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. பனிகள், மலைகள், கடல் என நித்யானந்தா சொல்வதைத்தான் நாமும் வாய்பிளந்து கேட்டுவருகிறோம்.

நித்யானந்தா மீது க்ரஷ்

நித்யானந்தா மீது க்ரஷ்

இந்நிலையில், பிரபல நடிகை பிரியா ஆனந்த் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நித்யானந்தா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் பிரியா ஆனந்த் என்கிற பெயரைக்கூட மாற்ற தேவை இல்லை என்றும், பெயர் பொருத்தம் பக்காவாக இருப்பதாக கூறியுள்ளார். அவரை எல்லாருக்கும் பிடிக்கிறது அவரை அனைவரும் பின் தொடர்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது அதனால் தான் அனைவரும் அவரின் பேச்சை கேட்டு வருவதாக கூறியுள்ளார்.

பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான பிரியா ஆனந்த், நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வாமனன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்ட கதாநாயகியானார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தினார்.

வியப்பில் ரசிகர்கள்

வியப்பில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து, வணக்கம் சென்னை, வை ராஜா வை, அபிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் இவரே நித்யானந்த மீது க்ரஷ் இருப்பதாக கூறியுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உடல்மெலிந்த நித்யானந்தா

உடல்மெலிந்த நித்யானந்தா

மேலும், சாமியார் நித்யானந்தாவின் இணையதள பக்கத்திலிருந்து கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளியாகததால், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து, நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். ஆனால், அந்த போட்டோவில் வழக்கமான அவரது தேஜஸ் குறைந்து, உடல்மெலிந்து காணப்படுகிறார். இதனால், அவருக்கு என்ன ஆயிற்று என்று அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X