Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிகினியில் டக்கராக இருக்கும் ராய் லட்சுமி… ஷப்ப்பா என பெருமூச்சுவிட்ட இளசுகள் !
சென்னை : ராய் லட்சுமி கிளுகிளுப்பூட்டும் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.
ராய் லட்சுமியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டி உள்ளது. கூடிய விரைவில் 3 மில்லியனை தொட்டு விடுவார்.
ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? இல்லையா?...பட்டிமன்றமே நடத்திய நெட்டிசன்கள்
மாடல்
மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.
தமிழில் அறிமுகம்
ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இப்படத்தில் விக்ராந்த்துடன் ஜோடி போட்டி நடித்திருந்தார் ராய் லட்சுமி. இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது.
கற்க கசடற தோல்வி
கற்க கசடற படம் தோல்வியைத் தழுவியதால் பட வாய்ப்புக்காக தெலுங்கு பக்கம் சென்றார் ராய் லட்சுமி. தெலுங்கில் இவர், காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பாரத்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால், தெலுங்கு திரைப்பட வாய்ப்புக்காக அங்கேயே வாசம் செய்த அவர் மலையாளம்,கன்னடம் படங்களில் நடித்தார். இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை.
தாம்தூம்
ஜெயம் ரவி, கங்கணா ரனாவத் நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த பாடலாக இருந்தது.
கதை தேர்வு சரியில்லை
தாம்தூம் திரைப்படத்தை அடுத்து இவருக்கு முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இவற்றில் எந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. திறமை இருந்தும் சரியாக கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியவில்லை.
காஞ்சனாவில்
நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, பல திரைப்படங்களில் கவர்ச்சி குயினாக வலம் வர ஆரம்பித்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சி பதுமையாக படம் முழுக்க வலம் வந்து இருந்தார் ராய் லட்சுமி. இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
வரிசையாக படங்கள்
ராய் லட்சுமி மிருகா, சிண்ட்ரல்லா, கேங்ஸ்டார் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜான்சி ஐபிஎஸ் என்ற கன்னடத் திரைப்படத்திலும், ஆனந்த பைரவி என்ற தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சிண்ட்ரெல்லா
நடிகை ராய் லட்சுமி சிண்ட்ரெல்லா திரைப்படத்தையே பெரிதும் நம்பி உள்ளார். அழகான தேவதைக்கு அனைவரும் வியந்து பார்க்கும் படி ஒரு வாழ்க்கை கிடைக்கிறது. அதை பார்த்து பொறாமை படும் உறவினர்கள், அவளை பழிவாங்க நினைப்பதும் தான் கதை. பேய் படமாகவும், ஃபேண்டஸி படமாகவும் உருவாகி உள்ள இந்த சிண்ட்ரெல்லா.
துளசி கதாபாத்திரம்
இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இவர் எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சிண்ட்ரெல்லா திரைப்படத்தை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில், பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் வில்லியாக நடித்துள்ளார். இப்படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி நடித்துள்ளார்.மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் பாக்கியமாக கருதுவதாக சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.
நீச்சல் குளத்தில் பிகினியில்
இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை தவறியது இல்லை. படம் இருக்கோ இல்லையோ என்னை பின்தொடரும ரசிகர்களுக்கு குறை வைக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்தது போல. கவர்ச்சி துள்ளலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், நீச்சல் குளத்தில் பிகினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இளசுகள் ராய் லட்சுமிக்கு தங்களது இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.