சமந்தா போட்ட லிஸ்ட்டை பாருங்க.. இவங்கதான் பெஸ்ட் ஹீரோயின்ஸாம் ப்பா
சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சமந்தாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே க்ளாப்ஸ் எழுந்தது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.
மாடலாக இருந்து பின்னர் சினிமாவுக்குள் வந்தவர் சமந்தா. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்து அங்கும் தனது கொடியை பறக்கவிட்டார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

பிரிவில் முடிந்த திருமணம்: ஆனால் இருவரது திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய் அளவில் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை சமந்தா பெறுவதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு; மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனவே சினிமாவிலிருந்து விலகினார்.
சூப்பர் ரெஸ்பான்ஸ்: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர்; சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மறுபடியும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதனையடுத்து ரீ எண்ட்ரி கொடுத்த அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இதனை இயக்க; வருண் தவான் ஹீரோவாக நடித்தார்.இதில் சமந்தாவின் நடிப்புக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்தது.
டேட்டிங்: இதற்கிடையே ராஜ்&டிகே இயக்குநர்களில் ஒருவரான ராஜுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பிக்கிள் பால் லீக்கில் ராஜுவுடன் சாம் கைகோர்த்தபடி வந்தார். அதனைப் பார்த்த பலரும் இரண்டு பேருக்கும் காதல் உருவாகிவிட்டதாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேருமே அமைதியே காத்துவருகிறார்கள். இந்நிலையில் சமந்தா போட்டிருக்கும் புதிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பெஸ்ட் ஹீரோயின்ஸ்: அதாவது அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த ஹீரோயின்களை சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சாம், "சாய் பல்லவி, நஸ்ரியா நஸீம், பார்வதி திருவோத்து, அனன்யா பாண்டே, ஆலியா பட்" ஆகியோரின் பெயரை குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அந்தப் போஸ்ட்தான் பயங்கரமாக கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











