எனக்கு பிடிச்ச கலர் காவி.. நீட் விவகாரத்தில் தொகுப்பாளினியின் சர்ச்சை பதிவு!
சென்னை: மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளினியும், மலையாள பிக் பாஸ் மூலம் பிரபலமானவருமான பெர்லி மணி, நீட் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்தால் கொந்தளித்துப்போன இணையவாசிகள் அவரை தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெர்லி மானி: அந்த பதிவில், மாணவர்கள் அடிபட்டு ரத்தம் சிந்துவதை பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. எந்த காரணத்திற்காகவும் உங்கள் உயிரை இழக்காதீர்கள். முதலில் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்லுங்கள். எல்லாவற்றையும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். இதைவிட உங்கள் உயிர்தான் முக்கியம். வன்முறை யார் செய்தாலும் தவறுதான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தேவையான காரணங்களுக்கு மட்டும் உங்கள் குரலை உயர்த்துங்கள் என்ற கருத்தையும் பகிர்ந்திருந்தார்.

காவி எனக்கு பிடித்த நிறம்: இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரை காயப்படுத்தியது, மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, வீட்டிற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது என்று பலரும் விமர்சித்தனர். பெர்லி மணி, மீண்டும் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில், தோல்வியடைந்த ஒரு சினிமாக்காரன் நான்கு போஸ்டர்கள் மட்டும் படித்துவிட்டு பத்து பக்க ஸ்கிரிப்ட் எழுதி, அதில் கொஞ்சம் மிளகுப் பொடியையும் அஜினோமோட்டோவையும் சேர்த்திருக்கிறார் என்று மறைமுகமாக ஒருவரை விமர்சித்தார். மேலும், என் கருத்தை பேசுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நான் பொம்மை அல்ல... நான் பெர்லி மணி என்று பதிவிட்டு, எனக்கு மிகவும் பிடித்த நிறம் காவி. தேசியக் கொடியிலுள்ள காவி நிறத்தின் மீதுதான் எனக்கு அதிக ஈர்ப்பு என்று அவர் பதிவிட்டது பெரும் விவாதத்தை தூண்டியது
தெரியாம பேசாதே: இதற்கிடையில், பெர்லி மணி குறிப்பிட்ட தோல்வியடைந்த சினிமாக்காரர் யார் என்ற கேள்வி இணையத்தில் பேசுபொருளானது. பின், பிரபல மலையாள இயக்குநரின் மகன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நீ சொன்னது என் அப்பாவைத்தானே? யாரிடம் என்ன பேசுகிறாய் என்று தெரிந்து பேசு. என்ன நடக்கிறது என்று தெரியாமல் நீட் பற்றி கருத்து சொல்லாதே என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். நீட் போராட்டம் முடிவடைந்த போதும், அவர்களின் இந்த மோதல் மலையாள இணையத்தில் புயலை கிளப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications