பவானி ரெட்டியுடன் காதலா.. என் மனைவி நடித்த படம் 18+.. சீரியல் நடிகர் ஓப்பன் டாக்
சென்னை: சன் டி.வியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் பிரஜின். சின்னத்திரை காதல் மன்னன் என்றே அழைக்கப்பட்டார். பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது சினிமா அனுபவம் பற்றியும் காசு இல்லாமல் படும் வேதனையை பேசியிருக்கிறார். காதல் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கும் நேர்காணல் ஹார்ட் ட்ச்சிங் ஆக இருக்கிறதாம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பலரும் சென்றிருக்கிறார்கள். பிரஜின் சின்னத்திரையில் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறார். டிஸ்யூம், மணல் நகரம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், பழைய வண்ணாரபேட்டை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு நல்ல ப்ரேக் கொடுக்கும் என எதிர்பார்த்தார். பெரிய அளவில் எந்த படமும் கைகூடவில்லை. பிறகு தன்னுடன் நடித்த நடிகை சான்ராவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கின்றன.

வடிவுக்கரசி அம்மா திட்டுனாங்க: பிரஜின் தற்போது அளித்த பேட்டியில், சான்ரா குடும்பத்தை கவனித்து கொண்டாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்கிறது. நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒருநாள் வடிவுக்கரசி அம்மா என்னை சாப்பிடும் போது திட்டுனாங்க. ஏண்டா நல்ல நடிக்கிற பொண்ணை இப்படி வீட்டில் வைத்து வேஸ்ட் பன்ற என்று கேட்டதும். அம்மா சாப்பிடுங்க இப்படியெல்லாம் கேட்காதீங்க. நானே சான்ராகிட்ட இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன். அவங்க கேட்கமாட்டேங்குறாங்க என்று சொன்னதும் வடிவுக்கரசி அம்மா புரிந்துகொண்டதாக தெரிவித்தார்.
விஜய் சேதுபதி என் நண்பன்: ஆரம்பத்தில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விஜய் சேதுபதி என்னுடன் சேர்ந்து சீரியலில் நடித்து கொண்டிருந்தார். சினிமாவில் ஸ்டார் நடிகராக இருந்தாலும் என்கிட்டே எப்போதும் என்ன மச்சான் பன்ற ஜாலியாக பேசிக்கிட்டுதான் இருக்கார். விஜய் சேதுபதி இன்னும் மாறவில்லை. ஒரே மாதிரிதான் இருக்காப்ல. கொரோனா டைம்ல சினிமா நடிகர்கள் முடங்கிவிட்டார்கள். சீரியல் நடிகர்களுக்கு எல்லா நாளும் வேலை இருந்தது. லாக்டவுனில் பெரிய அளவில் பிரச்னை வரவில்லை. ராஜா மாதிரி வாழ்ந்தேன். அப்போது ஒருநாள் விஜய் சேதுபதி போன் பண்ணி என்ன மச்சான் லாக்டவுன்ல நாங்க பணம் இல்லாம இருக்கோம். நீ மட்டும் பணம் சம்பாதிக்குற என காமெடியா கலாய்த்தாரு. இப்போ கூட போன் பண்ணா என்ன மச்சான் என்று தான் கேட்பேன். இன்றைக்கும் அந்த நட்பு தொடர்கிறது எப்போதும் ஜாலியா பேசுவோம் என பிரஜின் தெரிவித்தார்.

காசு இல்லாம பிரட் சாப்பிட்டேன்: திருமணம் ஆனதுக்கப்புறம் ரெ்ாம்ப ட்ரை திருமணத்தில் யாரும் சப்போர்ட் இல்லை, பாப்பா டெலிவரி ஒரு பக்கம் வீட்டு வாடகை எல்லா பக்கமும் டைட்டா இருந்து கஷ்டப்பட்டிருக்கோம். காசு இல்லைனா யார்கிட்ட போய் நின்னது கிடையாது. காசு இல்லைன நானும் சான்ராவும் பிரட் சாப்பிட்டு இருந்திருக்கோம். அப்போ ஒரு நண்பருக்கு இந்த விசயம் தெரிந்து எனக்கு அரிசி வாங்கி கொடுத்தார். அப்போ அவர்கிட்ட அரிசிக்கு காசு வாங்கிக்கிறதுனா சொல்லுங்க அரிசியை எடுத்துக்கிறேன் என்று சொன்னதும் அவர் கொஞ்சம் கலங்கி போய்ட்டாரு என பிரஜின் அளித்த பேட்டியில் தெரிவித்தார். பின்பு, பட்டினி கிடந்து சாகும்போது என்ன ப்ரோ கெளரவம் என மாஸாக தொகுப்பாளரின் கேள்விக்கும் பிரஜின் பதில் அளித்தார்.
ரீல்ஸ் சுத்தமா பிடிக்காது: நானும் சான்ராவும் சேர்ந்து ரீல்ஸ் எடுத்திருக்கோம். சீரியல் சூட் அல்லது சினிமா சூட்டிங்கில் யாராவது என்னிடம் வந்து வாங்க ரீல்ஸ் எடுக்க கூப்பிட்டால், தயவு செய்து என்னை விடுங்க வேண்டாம் என சொல்லிடுவேன். நீங்க ஃபெமிலியர் ஆகுறதும் அந்த ரீல்ஸ் ரீச் ஆகுறது எல்லாம் ஓகே அதுல என்னை சேர்த்து கிரிஞ்ச் பன்றது பிடிக்கலை. நமக்கு பிடிக்காத விசயத்தை செய்னு சொன்னா அவங்கள முகம் சுழிக்காம அய்யோ என்னை விட்டுடுஙக என சரண்டர் ஆகிடுவேன். அதுக்கு இது எவ்வளவோ பரவாலை என பிரஜின் தெரிவித்திருக்கிறார்.

யோகி பாபு இன்னும் மாறவில்லை: நான் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த போது யோகிபாபு நடித்திருந்தார். இதில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாக பழகிட்டு இருக்கோம். அவரும் இதே மாதிரிதான் லாக்டவுன் நேரத்தில் போன் பண்ணி என்னடா நிறைய சம்பாதிக்குற போல என ஜாலியாக கமெண்ட் அடித்தார். நானும் ஆமா என கூறினேன். அப்போ டே நைட்டும் பார்க்காம சீரியல் எடுத்தாங்க. அப்போ இருந்த ஒரே பொழுதுபோக்கு சீரியல் மட்டும் தான் என பிரஜின் தெரிவித்தார். சிவகார்த்திகேயன் இன்னைக்கு நல்ல ஹீரோவா வளர்ந்திருப்பது மகிழ்ச்சிதான். அதற்காக அவர் உழைத்திருக்கார் அதனால் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிப்பதாக பிரஜின் தெரிவித்தார்,
கண்ணீர் விட்டு அழுத சான்ரா: முன்னதாக சான்ரா அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்தும், குழந்தைகள் பிறந்தது குறித்து பேசியதும் கண்கலங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. பிரஜின் - சான்ராவிற்கும் பெற்றோர் ஆதரவு இல்லாமல் திருமணம் செய்துகொண்டார்கள், குழந்தைகள் பிறந்த நேரத்தில் இதை கவனிக்க யாரும் இல்லை என வருத்தப்பட்டு பேசியிருந்தார். இருவருக்குமான காதல் இப்போதும் இருக்கிறதா என கேட்டதற்கு காதல் இல்லாமல் இந்த வாழ்க்கை இப்படி இருக்காது எனவும் சான்ரா தெரிவித்திருந்தார்.

பவானியுடன் காதலா: சின்னத்தம்பி சீரியலில் எனக்கும் பவானிக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருந்தது அதனால் யாராவது காசிப் பேசியிருப்பாங்க. நா எப்போதும் பவானியை நல்ல தோழியாதான் பார்த்தேன். அந்த சீரியல் மூலமா நாங்க 2 பேரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். யாரோ ஒருத்தர் நடித்த சீன் பிடித்திருந்தால் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு. அதனால், காதல் வரலாம் என கூறியிருப்பார்கள். எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது என பிரஜின் தெரிவித்துள்ளார்.
18+ படமா: கடந்த 2017இல் சான்ரா நடிப்பில் வெளியான சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் குறித்து பேசிய பிரஜின், அப்போ அந்த படத்தோட போஸ்டரை பார்க்கும் போது 18+ படம் மாதிரி இருக்கும். ஆனால், நல்ல கன்டன்ட் உள்ள படம் என்பதால் தான் சான்ராவும் நடிக்க ஓகே சொன்னார். இந்த படத்தோட தயாரிப்பாளரும் என்கிட்ட சொல்லி புரிய வைத்தார். நானும் சான்ராவிற்கு உதவியாக இருந்திருக்கேன். ஆனால், வெளியே எந்த மாதிரி பேசுனாங்கனா சீரியலில் நடிக்கலை, பணம் இல்லாததால் இந்த மாதிரி படத்தில் நடிக்கிறார் என பேசினார்கள் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் மனைவிக்கு பிடித்த கதையில் அவங்க நடிக்கிறாங்க. கதையில் ஒரு சீன் கூட அந்த மாதிரி காட்சி இல்லை. ஆனால், அந்த படத்தில் சான்ராவின் கதாப்பாத்திரம் பாலியல் தொழில் பன்ற பொண்ணா நடிச்சிருந்தாங்க என பிரஜின் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











