கணவரை பிரிந்தேன்.. அப்பா அம்மாவும் பாத்துக்கல.. கண்கலங்கிய நளினி!
சென்னை: கணவர் என்னை பிரிந்ததும் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டேன் என்று நடிகை நளினி கண்கலங்கி கூறியுள்ளார்.
80, 90 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகர்களில் முக்கியமானவர் ராமராஜன். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டியாக இவரது படங்கள் கிராமத்தில் சக்சைப்போடு போட்டது. அதுமட்டுமில்லால் அந்த காலத்தில் அதிகமான சம்பளம் வாங்கிய நடிகர் ராமராஜன் தான்.

காதல் மலர்ந்தது: நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் மனசுக்கேத்த மகராசா, காவலன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இவர்களின் காதலுக்கு நளினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து யாருக்கும் தெரியாமல் இருவரும் 1987ம் ஆண்டு வீட்டை விட்டுவெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
விவாகரத்து பெற்று பிரிந்தோம்: திருமணத்திற்கு பின் நளினி சினிமாவை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டு சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்த நிலையில், சில காரணங்களால், இருவரும் 2000 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்த நளினி தற்போது சின்னத்திரை, சினிமா என இரண்டிலும் பிசியாக நடித்து வருகிறார்.
ராமராஜன் பாவம்: இவர் கணவர் ராமராஜனைவிட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும், மகன் மற்றும் மகள் திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது அதே போல, நளினி எந்த பேட்டி கொடுத்தாலும், அதில், ராமராஜன் நல்ல நடிகர். பாவம். தெரியாமல் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பிரிந்து விட்டோம். டைவர்ஸ் ஆனாலும் இன்றைக்கும் நான் ராமராஜனை காதலிக்கிறேன் என்று எப்போதும் தனது காதல் கணவர் பற்றியே பேசி வருகிறார்.
மனசு இடம் கொடுக்கவில்லை: இந்நிலையில், நளினி அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், என் கணவர் என்னை விட்டு பிரிய முடிவு எடுத்த போது, நான் என் அப்பா, அம்மாவின் காலில் போய் விழுந்தேன். அப்போது, என் பெற்றோர் உன்னை பார்த்துக்கொள்கிறோம். ஆனால், உன் குழந்தைகளை அவரிடம் விட்டுவிட்டு வா என்றார்கள். அதற்கு என் மனசு இடம் கொடுக்கவில்லை. மீண்டும் என் பெற்றோர், அக்கா, அண்ணன் அனைவரையும் பகைத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.
குழந்தைகள் கஷ்டப்பட்டார்கள்: அதன் பிறகு சென்னையில் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு இருந்தேன். அந்த சின்ன வீட்டில் என் குழந்தைகளால் இருக்க முடியவில்லை, இந்த வீடு வேண்டாம், அப்பா வீட்டுக்கே போய்விடலாம் என்று அடம் பிடித்தார்கள். அவர்களை என்னால் சமாளிக்கவே முடியல. அதன்பிறகு இதுதான் நம்ம வாழ்க்கை, இதில் இருந்துதான் வாழ்க்கையை நாம தொடங்க வேண்டும் என்று என் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன். அதன் பிறகுதான் நடிக்க வந்தேன் என்று நளினி அந்த பேட்டியில் கண் கலங்கி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











