மும்பை தொழில் அதிபருடன் காஜல் காதல்... நெட்டில் லீக்கான படங்கள்!!
மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் ஜோடியாக துபாயில் காஜல் அகர்வால் சுற்றிய படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட காஜல் அகர்வால் இன்று தமிழின் முன்னணி நடிகையாக உள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
இவரது தங்கை நிஷா அகர்வால் திருமணம் சமீபத்தில் நடந்தது. அப்போதே காஜலின் திருமணம் குறித்தும் பேச்சு கிளம்பியது.
அவரோ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டும்டும்டும் என்று ஜாடையாக சொல்லிவிட்டார்.

மும்பைவாலா
இந்த நிலையில்தான் மும்பை இளைஞர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த இளைஞர் மும்பையில் பிரபலமாக உள்ள இன்டீரியர் நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறாராம்.

வெளிநாட்டில்
இருவரும் ஒருவாரத்துக்கு முன் துபாய் சென்றபோது, அங்கு பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றியுள்ளார்கள். தங்கள் ரகசிய காதல் தெரிந்து விடக் கூடாது என்பதற்காவே இந்த வெளிநாடு ட்ரிப்பாம்.

செல்போனில் சிக்கிய ஜோடி
ஆனால் இவரைப் பார்த்துவிட்ட ரசிக சிகாமணி ஒருவர் தன் செல்போனில் காஜலை காதலருடன் படம்பிடித்து, அதை நெட்டிலும் ஏற்றிவிட்டார்.

காஜல் மவுனம்
இந்தப் படங்கள் வெளியான பிறகு காஜல் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார். தொடர்ந்து புதுப்படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், காதல் அம்பலமானால் கேரியர் பாதிக்கும் என்பதால் அவர் தன் காதலை சில மாதங்களாகவே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.


Click it and Unblock the Notifications











