மஞ்சு வாரியருக்கு உதட்டிலேயே பசக் என முத்தம் கொடுத்த ரசிகை.. ஆத்தா இம்புட்டு பாசமா?

திருவனந்தபுரம்: தமிழ் மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் கலக்கி வரும் நடிகை என்றால் அது நடிகை மஞ்சு வாரியர். ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கிய இவர், அதிலிருந்து தேசிய அளவில் கவனம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் டக்கென மேடையில் ஏறிய ரசிகை ஒருவர், மஞ்சு வாரியரை கட்டி பிடித்து அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதனால் இவர் நடிக்கும் மலையாளப் படங்களையும் ரசிகர்கள் தேடித் தேடி பார்கின்றனர்.

பிரமாதமான நடிப்பு: தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு ஒரு சூப்பர் ஸ்டாராகவே நடிகை மஞ்சு வாரியர் உருவாகியுள்ளார். இவர் தமிழில் என்ட்ரி கொடுத்த படம் அசுரன். அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். திருமண வயதில் உள்ள மகனுக்கு தாயாக நடித்த நடிகை மஞ்சு வாரியர் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலமும், தெளிவான தென் தமிழகத்து தமிழ் உச்சரிப்பின் மூலமும் அட்டகாசப்படுத்தியிருப்பார்.

Fan Kisses Manju Warrier on Stage Viral Video Sparks Reactions Online

முத்தம் கொடுத்த ரசிகை: தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரு மஞ்சு வாரியர், கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடலுக்கு செம ஸ்டைலாக நடனம் ஆடி, அசத்தியிருந்தார். இது மட்டும் இல்லாமல், இந்தப் பாடலில் இவரது எக்ஸ்பிரஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விடவும் சிறப்பாக இருப்பதாக பலர் கூறியிருந்தனர். அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் டக்கென மேடையில் ஏறிய ரசிகை ஒருவர், மஞ்சு வாரியரை கட்டி பிடித்து அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார், உடனே அருகில் இருந்தவர்கள் பதறி அடித்து அந்த ரசிகையை மேடையில் இருந்து கீழே இறக்கினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ஆத்தாடி இம்புட்டு பாசமா என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X