இந்த அன்புக்கு நான் என்ன பண்ணியிருக்கேன்.. நடிகை ராஷ்மிகாவை நெகிழ்ச்சிடைய வைத்த பாசக்கார ரசிகர்!
சென்னை: அதீத அன்பு காரணமாக, ரசிகர் செய்த செயலால், இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
Recommended Video
தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சூர்யாவின் அருவா படத்திலும் இவர்தான் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர். பின்னர் சலோ என்ற படம் மூலம், தெலுங்க்கு வந்தார்.

டியர் காம்ரேட்
அவருக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது மெகா ஹிட்டாக, நடிகைக்கு ஏக வரவேற்பு. அடுத்து, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். இதுவும் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதன் தமிழுக்கும் வந்தார்.

அல்லு அர்ஜூன்
மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்கு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்து அவர் நிதினுடன் நடித்த பீஷ்மா என்ற படம் பிப்ரவரில் ஹிட்டாக, ராஷ்மிகாவைப் பிடிக்க முடியவில்லை. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

வருமான வரி
அடுத்தும் சில படங்களில் பேசி வருகின்றனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா. கர்நாடக மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் படம் தயாரிக்க இருப்பதாகவும் நல்ல ஸ்கிரிப்ட்களை தேடிவருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
திக்கு முக்காடினார்
இதற்கிடையே, கடந்த 5 ஆம் தேதி தனது பிறந்த தினத்தைக் கொண்டாடினார் ராஷ்மிகா. அவருக்கு ஏராளமான நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தனர். அந்த அன்பில் திக்கு முக்காடி இருந்த ராஷ்மிகாவுக்கு ஒரு ரசிகர் அனுப்பியிருந்த வீடியோ, நெகிழ்ச்சியை வரவழைத்துவிட்டது.

நெகிழ்ச்சி
அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கோயில் ஒன்றில் பாலாபிஷேகம் செய்திருக்கிறார், அந்த ரசிகர். அதை அப்படியே வீடியோவாக எடுத்து, ராஷ்மிகாவை டேக் செய்து ட்விட்டரில் வெளியிட்டார். நெகிழ்ந்த ராஷ்மிகா, அதைக் குறிப்பிட்டு, இந்தளவு அன்புக்கு தகுதியா, நான் என்ன செய்திருக்கேன்? என்று கேட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











