மஞ்சு வாரியர் இடுப்பைக் கிள்ளினாரா ரசிகர்?.. கொஞ்சம் மிஸ்.. தீயாக பரவும் வீடியோ.. என்ன ஆச்சு?

பெங்களூர்: 46 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர் திடீரென தனது காரை விட்டு இறங்கி ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்த போது கூட்டத்தில் இருந்து ஒரு கை அவர் மீது பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவை நேற்று இரவு முதல் நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து அந்த நபரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் இந்த ஆண்டு மோகன்லாலின் எம்புரான் படத்தில் அரசியல் தலைவராக அசத்தலான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், சமீபத்தில் நடன தினத்தன்று குச்சிப்புடி நடனத்தை ஆடிய வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளினார்.

Fan touched Manju Warrier in a bad manner video circulates in social media

தமிழ் சினிமாவில் அசுரன் படத்தில் நடிக்க ஆரம்பித்த மஞ்சு வாரியர் அஜித் குமாரின் துணிவு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 என வரிசையாக பல படங்கள் பண்ணிவிட்டார். மேலும், ஆர்யா மற்றும் கெளதம் ராம் கார்த்திக் நடித்து வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பெங்களூர் ஷாப்பிங் மால் திறப்பு விழா: மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் பெங்களூரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றை திறந்து வைக்கும் விழாவுக்காக அழைக்கப்பட்ட நிலையில், நீல நிற சுடிதார் அணிந்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார். அங்கே அவரை காண ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டனர். நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்து விட்டு தனது காரில் ஏறி செல்லும் போது அவரை சில ரசிகர்கள் சாலையில் பின் தொடர தனது காரை நிறுத்தி விட்டு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் மஞ்சு வாரியர்.

இடுப்பை கிள்ளினாரா ரசிகர்: நடிகை மஞ்சு வாரியர் தனது கார் கதவை திறந்து வெளியே வந்து அதன் மீது ஏறி நின்று ரசிகர்களை சந்தோஷமாக சந்தித்தார். அப்போது ஒரு இளைஞர் திடீரென மஞ்சு வாரியரிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்கிற அவசரத்தில் அவரது இடுப்பைத் தொட்டு அவரை அழைத்த காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த நபர் மஞ்சு வாரியரை தப்பாக தொட்டு விட்டார் என்றும் இடுப்பைக் கிள்ளி விட்டார் என்றும் சோஷியல் மீடியா முழுக்க பரபரப்பு கிளம்பியுள்ளது.

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா: எப்படி ஒரு நடிகையை தொட்டு ரசிகர்கள் கூப்பிடுவார்கள் என்றும் இது அத்துமீறல் இல்லையா? என மஞ்சு வாரியர் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் மஞ்சு வாரியர் மார்பின் மீதே அந்த நபரின் கை பட்டு இருக்கும் என்றும் அந்த நபரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

அமைதியாக நழுவிய மஞ்சு வாரியர்: ஆனால், நடிகை மஞ்சு வாரியர் அந்த இளைஞர் மீது எந்தவொரு கோபமும் காட்டாமல் ரசிகர்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டு சிரித்த முகத்துடனேயே அங்கிருந்து அமைதியாக நழுவிச் சென்றுள்ளார். அந்த இளைஞர் தொட்ட பின்னர் கூட, கடுப்பாகாமல் சிரித்துக் கொண்டே மஞ்சு வாரியர் ரசிகர் ஒருவரது மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்துக் கொடுத்து விட்டு தனது காரில் ஏறி சென்றதை பார்த்த ரசிகர்கள் அந்த நபர் தப்பாக தொட்டு இருந்தால் நிச்சயம் அங்கேயே மஞ்சு வாரியர் ஓங்கி அறைந்திருப்பார். ஆனால், அவசரத்தில் ரசிகர் கூப்பிட அப்படி செய்தாலும் நடிகையை அப்படி தொட்டு இழுப்பது கேவலமான செயல் என கண்டித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X