செல்ஃபி எடுக்குற சாக்குல கிஸ் அடிச்ச ரசிகர்.. ஷாக்கான பாலிவுட் நடிகை!
மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலிகானுடன் செல்ஃபி எடுக்கும் சாக்கில் ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கானின் மகளும் பாலிவுட்டின் இளம் நடிகையுமான சாரா அலிகான், இன்று காலை ஜிம்மில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அவரை பார்க்க பல ரசிகர்கள், போட்டோகிராபர்கள் காத்துக் கிடந்தனர். ரசிகர்களை சந்தித்த சாரா அலிகான் அவர்களுடன் செல்ஃபி எடுத்து வந்தார் அப்போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.
பிகினி
பாலிவுட் நடிகை சாரா அலிகான் பிகினி அணிந்து பீச்சில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கினார்.
ஜிம் கேர்ள் q
பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். தினமும் ஜிம் போகும் பழக்கம் சாரா அலிகானுக்கும் உள்ளது. ஜிம்முக்கு வெளியே அவரை காண தினமும் ரசிகர்களும், புகைப்படக் கலைஞர்களும் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.
செல்ஃபி எடுக்க அனுமதி
ரசிகர்கள் மத்தியில் சகஜமாக பழகக்கூடியவர் சாரா அலிகான். ஜிம்மில் ஒர்க்கவுட் முடித்து வந்த பிறகு வெளியே காத்திருக்கும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
முத்தம்
செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த ரசிகர்களில், ஒரு ரசிகர், சாரா அலிகானிடம் ஹேண்ட் ஷேக் செய்ய கையை நீட்டினார். சாராவும் சட்டென்று தனது கையை ஹேண்ட் ஷேக்குக்காக நீட்ட அந்த ரசிகர் சட்டென கையில் முத்தம் கொடுத்துவிட்டார்.

ஷாக்
இதனால், சாரா அலிகான் ஷாக்காக, அவரது பாடிகார்டுகள் அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னரும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பின்னர் அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளார் சாரா அலிகான். சாரா அலிகானின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











