Trisha: கில்லிக்கு தியேட்டர் விசிட்.. மங்காத்தாவுக்கு ஒரு போஸ்ட் கூட போடாத த்ரிஷா.. ரொம்பத்தான் ஓரவஞ்சனை
சென்னை: இந்த நாளை தமிழ் சினிமா வரலாற்றில் மங்காத்தா நாள் என்று மாற்றி எழுதும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். புது படத்தின் ரிலீஸைப் போல இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரவேற்று வருகிறார்கள். படத்தில் நடித்த மகத், பிரேம் ஜி, பைபவ், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் படத்தை தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இப்படியான நிலையில் ரசிகர்கள் பலரது கவனமும் மங்காத்தா படத்தில் நடித்த நடிகை த்ரிஷா மீது திரும்பியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, மகத், வைபவ், பிரேம் ஜி, ராய் லக்ஷ்மி, அஞ்சலி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் அஜித்தின் 50 வது படமாக வெளியானது. படம் வெளியான கால கட்டத்திலேயே பெரும் வெற்றியை குவித்தது.

இது ஒரு புறம் இருக்க, தமிழ் நாட்டில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் மெல்ல மெல்ல தலை தூக்கியபோது அஜித் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் தான். மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்வது தொடர்பான அறிவிப்பு என்பது ஒவ்வொரு ஆண்டு அஜித் பிறந்த நாள் காலகட்டத்தில் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அப்படியான எந்த அறிவிப்பும் வராது.
இப்படி இருக்கும்போது இந்த ஆண்டு, கொஞ்சம் கூட ரசிகர்கள் எதிர்பார்க்காத காலத்தில் மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில், கிங் மேக்கர் இஸ் பேக் என்று பதிவிட, மங்காத்தா ரீ ரிலீஸ் உறுதி ஆனது. இன்று படம் ரீ ரிலீஸ் ஆகி வேற லெவல் சம்பவம் செய்து வருகிறது.

மங்காத்தா ரீ ரிலீஸ்: ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் படத்தின் ரீ ரிலீஸ் சிறப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் சிலரின் பார்வை த்ரிஷா பக்கம் திரும்பி உள்ளது. காரணம் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸில் அதிக வசூல் செய்த படம் என்றால் அது விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் தான். இந்த படம் ரீ ரிலீஸில் மட்டும் ரூபாய் 12.5 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. கில்லி படத்தின் ரீ ரிலீஸின் போது த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ரீ ரிலீஸ் குறித்த தகவல்களை பகிர்ந்தார். சென்னை ரோகிணி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்தார். இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்தார்.
விளாசல்: ஆனால் மங்காத்தா படத்திற்கு த்ரிஷா தியேட்டர் விசிட்டும் அடிக்கவில்லை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட்டும் போடவில்லை. அதைக் கவனித்த ரசிகர்கள். தனது நெருங்கிய நண்பர் விஜய் உடன் நடித்த படம் என்றால் தியேட்டர் விசிட் அடிக்கும் த்ரிஷா, அஜித் உடன் நடித்த படம் என்றால் ஒரு போஸ்ட் கூட போடமாட்டாரா? த்ரிஷாவுக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











