வாம்மா ராசாத்தி: ஜல்லிக்கட்டுக்காக நடிகை நிவேதா பெத்துராஜை பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து
மதுரைக்கார பொண்ணான நிவேதா அமீரகத்தில் படித்தவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையானவர். சென்னைக்கு ஜாகையை மாற்றியுள்ள அவர் கோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் நிவேதா. மேலும் ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் படத்தையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வைத்துள்ளார்.

தமிழச்சி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிவேதாவை நெட்டிசன்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பாராட்டி வருகிறார்கள். மதுரை பெண் அல்லவா அது தான் தமிழச்சி என்கிற உணர்வு என்கிறார்கள் ரசிகர்கள்.
சூரி
தமிழ் மண்ணின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் தடை உடைக்க தலைநகர் டெல்லியில் போராடிய நம் உறவுகளுக்கு நன்றி என நடிகர் சூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











