Redin Kingsley - ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் மகள் இவர்தானா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: Redin Kingsley Sangeetha (ரெடின் கிங்ஸ்லி சங்கீதா) ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவுடன் ஒரு சிறுமி இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கும் சூழலில் அவர்தான் சங்கீதாவின் மகளா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ரெடின் கிங்ஸ்லி இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார். நெல்சன் முதன்முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதற்கு ரெடினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பானதால் மீண்டும் தனது நடன பள்ளி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் தொழில்களை கவனிக்க சென்றுவிட்டார் கிங்ஸ்லி.

Fans are questioning if she is the daughter of Redin Kingsley and Sangeetha with a little girl

கோலமாவு கோகிலா: பிறகு பல வருடங்கள் கழித்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். நயன் தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதில் ரெடின் கிங்ஸ்லி நடித்து தன்னுடைய திறமையை காண்பித்து தனித்த அடையாளத்தை பெற்றார். இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

பிஸியான ரெடின் கிங்ஸ்லி: கோலமாவு கோகிலா மூலம் கிடைத்த வெளிச்சத்தை அடுத்து பல படங்களில் நடித்த அவர் தனது வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் மூலம் மேலும் பலரையும் கவர்ந்தார். இதன் காரணமாக வரிசையாக படங்களில் நடித்த அவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் நடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி அடுத்ததாக டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்திருக்கிறார்.

திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த சூழலில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்திருக்கிறார். சமீபத்தி மைசூரில் ஒரு படப்பிடிப்பில் வைத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிம்ப்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்ட அவர்கள் மாலத்தீவு, துபாய் நாடுகளுக்கு சென்றிருக்கின்றனர்.

ஏற்கனவே திருமணம்: ஹனிமூனை முடித்துவிட்டு அவர்கள் சென்னையில் பிரமாண்டமான முறையில் ரிசப்ஷனை வைக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதா கிரிஷ் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றதாகவும்; அவருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ புகைப்படமோ விஷயமோ வெளியாகவில்லை.

புதிய புகைப்படம்: இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லியும், சங்கீதாவும் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அவர்களுடன் ஒரு சிறுமி நிற்கிறார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவர்தான் சங்கீதாவின் மகளா என ரசிகர்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேபோல் இன்னும் சிலரோ, இந்த சிறுமி பார்ப்பதற்கு அச்சு அசல் சங்கீதா போலவே இருப்பதால் கண்டிப்பாக இச்சிறுமிதான் சங்கீதாவுடைய மகளாக இருக்கும் என உறுதிபட சொல்லி அந்தப் புகைப்படத்தை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X