ஜன நாயகன் படத்திலும் த்ரிஷாவா? இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் சொல்லும் தரமான அப்டேட்..

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும் தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படக்குழு கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியது. பல திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து சொன்னார்கள். இந்நிலையில் நடிகை த்ரிஷா நேற்று இரவு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதை பார்த்ததில் இருந்து ஜன நாயகன் படத்தில் த்ரிஷா நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு த்ரிஷா பகிர்ந்துள்ள புகைப்படங்களும் ஒத்துப்போகின்றது.

நடிகர் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சினிமாவில் இருந்து முழுவதுமாக வெளியேற போவதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விஜய் மேற்கொண்டு நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது தொடர்பாக முடிவை உறுதியாக எடுப்பேன் எனக் கூறினார் என நடிகை மமிதா பைஜூ கூறினார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு த்ரிஷா பகிர்ந்த வாழ்த்து புகைப்படம், அதன் பின்னர் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது ஜன நாயகன் படத்திலும் த்ரிஷா நடித்துள்ளாரா அல்லது கோட் படத்தைப் போல ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

Fans Asking Actress Trisha Acts Vijay Last Movie Jana Nayagan Photos For The Reason
Photo Credit:

ஜன நாயகன் படத்தில் த்ரிஷா: அதாவது விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பகிர்ந்த புகைப்படத்திலும் அதை அடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு தனது செல்லப்பிராணியை முதன் முதலாக அழைத்து வந்ததாகவும் பதிவிட்டுள்ள புகைப்படத்திலும் த்ரிஷா ஒரே உடையைத்தான் அணிந்துள்ளார். இதனைப் பார்க்கும்போது, விஜய்யும் ஜன நாயகன் படத்தின் லுக்கில் தான் த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்திலும் உள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள், ஜன நாயகன் படத்திலும் த்ரிஷா நடித்துள்ளாரா என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். இணையவாசிகளின் சந்தேகத்திற்கு ஏற்ற வகையில் த்ரிஷாவின் உடையும் இருப்பதால் ஜன நாயகன் படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்ற பேச்சு தற்போது அதிகரித்து வருகிறது.

கேமியோ: ஏற்கனவே விஜய்யின் கோட் படத்தில் த்ரிஷா ஒரு துள்ளலான பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதேபோல் ஜன நாயகன் படத்திலும் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கலாம் அல்லது படத்தில் ஏதாவது கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் எனவும் பேச்சுகள் அதிகரித்து வருகிறது. இது குறித்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X