Rashmika Mandanna: ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா வைத்த செல்லப் பெயர் இதுவா? வேற லெவலில் இருக்கே?
ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய ராஷ்மிகா மந்தனா தற்போது, பான் இந்தியா ஸ்டாராக மாறி நிற்கிறார். அவர் கமிட் ஆகி நடிக்கும் படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் அடித்து வருகிறது. இவர் கடந்த 5 ஆம் தேதி தனது 29வது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார். இப்படியான நிலையில், தனது பர்த் டே கொண்டாட்டம் தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக மாறினார். குறிப்பாக அவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் இவர் கொடுக்கும் க்யூட் ரியாக்ஷன்களுக்கு இதயத்தை பரிகொடுத்தார்கள் என்றுதான் கூறவேண்டும். அதன் பின்னர்தான் அவர் நேஷனல் கிரஷ் என அழைக்கப்பட்டார். நடிகையைப் பொறுத்தவரையில் தான் நடிக்கும் படத்தில் நடிகர் குறித்து மக்கள் எந்த அளவுக்கு பேசுகிறார்களோ, அதே அளவுக்கு தனது நடிப்பு குறித்து பேச வேண்டும் என மிகவும் கவனமாக இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா: நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருக்கிறார் எனக் கூறப்பட்டாலும், அது கிட்டத்தட்ட உண்மை என்பது போலத்தான் ராஷ்மிகா மந்தனா நடந்து கொள்கிறார். இந்த பிறந்த நாளைக் கூட விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கொண்டாடத்தான் அவர் வெளி நாட்டிற்கு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் இவ்வாறு கூற காரணமே, இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

செல்லப் பெயர்: இப்படியான நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனா தனது பிறந்தநாளுக்கு தானே ஹேப்பி பர்த் டே பாடலை பாடி, நடனமும் ஆடியுள்ளார். இதில் அவர் தனது பெயரை வர்ஷி எனக் குறிப்பிடுகிறார். இதைக் கேட்டதும் ரசிகர்கள் 'வர்ஷி' என்பது விஜய் தேவரகொண்டா உங்களுக்கு வைத்த செல்லப் பெயரா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கேப்ஷன்: இந்த வீடியோவுக்கு, " எல்லா இலக்குகளும் சாதாரணமானவை அல்ல. எனவே எல்லா வெற்றிகளையும் கொண்டாடுங்கள், அதுவும் பெரிய அளவில் கொண்டாடுங்கள். ஒரு வயது கூடிவிட்டதா கொண்டாடுங்கள், உங்களுக்கு பாக்கெட் மணி கிடைக்கிறதா கொண்டாடுங்கள். திருமணம் ஆகிவிட்டதா கொண்டாடுங்கள். காலில் காயம் ஏற்பட்ட பின்னர் மருத்துவர், இனிமேல் நீங்கள் ஓடலாம் எனக் கூறுகிறாரா கொண்டாடுங்கள். தேர்வில் பாஸ் ஆகிவிட்டீர்களா கொண்டாடுங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டாடுங்கள். வாழ்க்கையில் எதுவும் சிறியது என இல்லை. எனவே அனைத்தையும் பெரிய அளவில் கொண்டாடுங்கள்" என கேப்ஷன் இட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவும் கடற்கரையில்தான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வீடியோவை எடுத்தது விஜய் தேவரகொண்டாவா எனவும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











