அழவும் தெரியல.. ஆடவும் தெரியல.. அனன்யா பாண்டேவை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்.. யார் மீது தவறு?

மும்பை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காஜல் அகர்வால் சித்ரா தேவி பிரியாவாக ஆடுவதும் பாடுவதுமாக அலப்பறையை கிளப்பியிருப்பார். அதே போல தற்போது அனன்யா பாண்டே பாலிவுட் படத்தில் மேடையில் பரதநாட்டியம் ஆடிய காட்சி ஒன்று ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நெப்போடிசம் தந்த வாய்ப்புக் காரணமாக சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் இப்படித்தான் இருக்கும் என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Fans Asks Ananya Pandey just watch Sai Pallavi and Rukmini Vasanth for Bharatanatiyam troll

விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே லைகர் படத்தில் நடிக்கும் போது அவருக்கு அழுவது போல நடிக்கக் கூட தெரியவில்லை என ட்ரோல் செய்தனர். அதே போல தற்போது ஆட கூட தெரியவில்லை என கலாய்த்து வருகின்றனர். ஆனால், இது அனன்யா பாண்டேவின் தவறு மட்டுமல்ல என நெட்டிசன்கள் வாதம் செய்து வருகின்றனர்.

உள்ளாடையுடன் போஸ்: அனன்யா பாண்டேவின் அழகும் கவர்ச்சியும் அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தது. மாலத்தீவில் பிகினி உடையில் எல்லாம் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை எக்கச்சமாக ஈர்த்து வருகிறார். ஆனால், அவர் நடிக்கும் படங்கள் மூலமாகத்தான் அவருக்கு கண்டமே உள்ளது என கலாய்த்து வருகின்றனர்.

Fans Asks Ananya Pandey just watch Sai Pallavi and Rukmini Vasanth for Bharatanatiyam troll

அழவும் தெரியல ஆடவும் தெரியல: புரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், வில்லனாக மைக் டைசன் நடித்த லைகர் படத்தில் ஹீரோயினாக அனன்யா பாண்டே தான் நடித்திருந்தார். டோலிவுட் டு பாலிவுட் ரசிகர்களை எப்படி கவர்கிறேன் பாருங்க என இயக்குநர் புரி ஜெகநாத் அந்த படத்தை இயக்க அந்த படத்தில் அழ கூட அனன்யா பாண்டேவுக்கு தெரியவில்லை என ரோஸ்ட் பறந்த நிலையில், படம் ஃப்ளாப் ஆனது. இந்நிலையில், தற்போது ஆடவும் தெரியவில்லை என பரதநாட்டியம் காட்சி ஒன்றை வைத்து பங்கமாக ரோஸ்ட் செய்யப்பட்டு வருகிறார்.

சாய் பல்லவி, ருக்மிணி கிட்ட கத்துக்கோங்க: ஷியாம் சிங்கா ராய் எனும் நானி படத்தில் சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்த்து எப்படி நடனமாட வேண்டும் என அனன்யா பாண்டே கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் காந்தாரா 2 படத்தில் ருக்மிணி வசந்த் கூட அருமையாக பாரம்பரிய நடனத்தை ஆடியிருப்பார். ஆனால், அனன்யா பாண்டே ரோபோ போல ஆடுகிறார் என துவைத்து எடுத்து வருகின்றனர்.

யார் மீது தவறு?: அனன்யா பாண்டே மட்டுமே இதற்கு காரணம் கிடையாது என்றும் நடன இயக்குநர் மற்றும் படத்தின் இயக்குநர் என யாருமே ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் எடிட் டேபிளில் இந்த சீனை சரி பண்ணாமல் விடுத்தது தான் பிரச்னைக்கு காரணம் என்று அனன்யா பாண்டே ரசிகர்களும் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X