போதி தர்மரை அழைச்சுட்டு வந்து கொரோனா வைரஸை அழியுங்களேன்.. ஸ்ருதி ஹாசனிடம் கோரிக்கை வைத்த ஃபேன்ஸ்!

By

சென்னை: போதை தர்மரை அழைத்துவந்து இந்த கொரோனா வைரஸை அழியுங்களேன் என்று நடிகை ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommended Video

Celebrities Quarantine | Shanthanu | KiKi | Dhruv Vikram

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

தீவிர நடவடிக்கை

தீவிர நடவடிக்கை

இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியா முழுவதும் 468 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள், ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி அரசு அறுவுறுத்தி வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

அதில், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தனித்திருங்கள்

அதை ஏற்று மக்கள் ஊரடங்கைக் கடைபிடித்தனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். நடிகை ஸ்ருதிஹாசனும், தனது இன்ஸ்டாகிராமில், வீட்டில் தனித்திருங்கள் என்று கூறி பதிவிட்டிருந்தார். அதில், நான் என்னைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இருங்கள். எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

போதிதர்மர்

போதிதர்மர்

இதை வரவேற்று பலர் கமென்ட் அடித்துள்ளனர். அதில் சில ரசிகர்கள், ' தயவு செய்து உதவி பண்ணுங்க... அந்த (7 ஆம் அறிவு) போதி தர்மரை அழைச்சுட்டு வந்து (கொரோனா) வைரஸ்ல இருந்து குணப்படுத்துங்களேன்' என்று கேட்டுள்ளனர். சிலர் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். சமீபத்தில், நீங்கள் பதிவு செய்த புகைப்படங்களிலேயே இதுதான் சூப்பர் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X