லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் சும்மா கிடைக்கல.. நயன்தாராவை கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தடம் பதித்து இன்று நட்சத்திர நடிகையாக மின்னிக்கொண்டு இருக்கிறார். இவர் இந்த இடத்தை அடைய பல அவமானங்கள் வேதனைகளை கடந்து வந்துள்ளார். அப்படித்தான், நயன்தாரா சினிமாவிற்கு வந்த புதிதில் இயக்குநர் ஒருவர் அவரை திட்டியது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுக்கும் மேலாக இருக்கும் நயன்தாரா அண்மையில் தனது 75வது படமான அன்னபூரணி என்ற படத்தை நிறைவு செய்தார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதும், சினிமாவில் படு பிஸியாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் பிஸ்னசிலும் கொடி கட்டி பறந்து வரும் நயன்தாரா, தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார்.

நயன்தாரா : ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா, அந்த படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் பாடலை க்யூட்டாக பாடி தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடிக்க அவருடைய மார்க்கெட் மிகப்பெரியளவில் உயர்ந்தது. விஜய்யுடன் வில்லு, பிகில், சிவகாசி படத்தில் ஒரு பாடல், அஜித்துடன் ஆரம்பம், ஏகன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நயன்தாரா இது?: ஐயா படத்தில் சரத்குமாருக்கு நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள நிலையில், அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், ஐயா படத்தில் பார்த்த நயன்தாராவா இது..? என்று சொல்லும் அளவுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில் போட்டு வரும் போது பெருமையா இருக்கு. ஐயா படப்பிடிப்பில் முதல் நாள் ஷூட்டுக்கு அவர் வந்தது என்னால் மறக்க முடியாத நிகழ்வு. அந்த படத்தில் நயன்தாரா கிராமத்து பெண்ணாகத்தான் நடித்து இருப்பார்.
டிரெஸ் மாத்திட்டு வா: ஆனால், அவர் முதல் நாள் ஷூட்டிங்கில் மாடர்ன் உடையில் வந்து இறங்கினார். இதைப்பார்த்து டென்ஷனான ஹரி, நயனிடம், ஒழுங்கா ரூமுக்கு போ, நான் உன்னை எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறேன் தெரியுமா. பக்காவான கிராமத்து பெண் ரோல் உனக்கு, இப்படி வந்து நிக்கிற. போய் டிரெஸ் மாத்திட்டு வா என்று கோபமாக திட்டியிருக்கிறார். உடனே நயன்தாராவும் ரூமுக்கு சென்று உடையை மாற்றிவிட்டு வந்தார். ஆனால் இன்னைக்கு நயன்தாராவை இந்த உயர்வான இடத்தில் பார்க்க பெருமையாக இருக்கு என்று சரத்குமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவை கொண்டாடும் ரசிகர்கள்: இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நயன்தாராவின் தீவிர ரசிகர்கள், நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் சும்மா கிடைக்கவில்லை, பல அவமானங்கள் , பல தோல்விகளை தாண்டி இன்னும் தனக்கான இடத்தில் இருக்கிறார் என்று ரசிகர்கள் நயன்தாராவை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











