கடை திறந்து வைத்த கீர்த்தி சுரேஷ்.. தவெக என கோஷம்.. இது என்ன புது ரூட்டா இருக்கு?

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் கீர்த்தி; கடைசியாக உப்பு கப்புரம்பு என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவுக்கு பிறந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் காரணமாக கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அவர்.

தெலுங்கிலும் பிஸி: தமிழ், மலையாளத்தில் மட்டும் நடித்துவந்த அவர் அடுத்ததாக தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்று கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதினையும் வாங்கி தந்தது. அதனையடுத்து அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட தமிழில் மாமன்னன் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க மீண்டும் தமிழில் பிஸியானார் அவர். அந்தவகையில் சைரன், ரகுதாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Fans chanted TVK when Keerthy Suresh opened the store

ஹிந்தியிலும் கீர்த்தி: தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான தெறி படம் ஹிந்தியில் ரீமேக்கானது. தமிழில் ஹிட்டடித்ததால் பாலிவுட்டிலும் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இயக்குநர் அட்லீக்கும் நஷ்டத்தை அப்படம் ஏற்படுத்திவிட்டதாக தகவல் உண்டு. அதேபோல் கீர்த்திக்கும் இன்னும் சில ஹிந்தி வாய்ப்புகள் கை நழுவி போனதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ்: சூழல் இப்படி இருக்க கீர்த்தி சுரேஷுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் வைத்து ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார். அதில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். ஆண்டனியை பொறுத்தவரை கொச்சி, சென்னை, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிப்பு: திருமணம் செய்துகொண்ட பிறகு கீர்த்தி நடிக்கமாட்டார் என்றும் கருதப்பட்டது. ஆனால் நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தெலுங்கில் அவர் நடிப்பில் சமீபத்தில் உப்பு கப்புரம்பு திரைப்படம் வெளியானது. மண முடித்த பின் வெளியான பேபி ஜான் தோல்வியடைந்ததால்; இந்தப் படமாவது வெற்றி படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தர் அவர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்து மோசமான விமர்சனத்தை சந்தித்தது. இது அவருக்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடை திறந்த கீர்த்தி: இது ஒருபக்கம் இருக்க சினிமாவில் மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்துகொள்கிறார் கீர்த்தி. அந்தவகையில், ஈரோட்டில் கடை ஒன்றை திறந்து வைத்தார் கீர்த்தி. பிறகு ரசிகர்கள் மத்தியில் பேச ஆரம்பித்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் திடீரென தவெக, தவெக என்று விஜய்யின் கட்சி பெயரை கோஷமிட ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. முன்னதாக வெளியான ஒரு தகவலில், "கீர்த்தி சுரேஷ் விரைவில் தவெகவில் இணையப்போகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துதான் ரசிகர்கள் இப்படி கோஷமிட்டதாக ஒருதரப்பினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X