விமானநிலையத்தில் பூஜா ஹெக்டேவை விடாமல் துரத்திய ரசிகர்கள்.. தளபதி 69 என கத்தி உற்சாகம்!

சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளைய தினம் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளது. இந்த முதல்கட்ட சூட்டிங் தொடர்ந்து ஒருவார காலம் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தில் விஜய்யின் ஜோடியாகியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. முன்னதாக இந்த ஜோடி பீஸ்ட் படத்தில் இணைந்து மாஸ் காட்டியது. பாடல் காட்சிகளிலும் விஜய்க்கு டஃப் கொடுக்கும்வகையில் பூஜா ஹெக்டே ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

vijay thalapathy 69 movie pooja hegde

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கையில் இன்றைய தினம் மிகவும் சிறப்பான நாளாக பார்க்கப்படுகிறது. தளபதி 69 படம் அவருடைய இறுதி படமாக மாறியுள்ள நிலையில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இது போல இந்த மாத இறுதியில் நடத்தப்படவுள்ள அவரது கட்சி மாநாட்டிற்கான பந்தக்காலும் இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த கொண்டாட்டங்களை குறிப்பிடும் வகையில் அவர் இன்று காலையிலேயே கோட் என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்து சிறப்பான போஸ் கொடுத்து இன்றைய நாளை சிறப்பாக்கியுள்ளார்.

தளபதி 69 படம்: தளபதி 69 படத்தின் பூஜையை அடுத்து அதன் கொண்டாட்ட தருணங்களின் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டையில் நடிகர் விஜய் மிகவும் சிறப்பாக, அழகாக மற்றும் பிரகாசமாக காணப்பட்டார். இந்த பூஜையில் அவருக்கு தளபதி 69 படத்தில் ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே மற்றும் நமீதா பைஜூ, பாபி தியோல், இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த நடிகை பூஜா ஹெக்டேவை விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது.

vijay thalapathy 69 movie pooja hegde

நடிகை பூஜா ஹெக்டே: பூஜா ஹெக்டே கியூட்டான மற்றும் எளிமையான உடையுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் தளபதி 69 என்று அடுத்தடுத்து அதிரடியாக கத்தியதை பார்க்க முடிந்தது. இதை பார்த்த நடிகை பூஜாவும் அவர்களுக்கு கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ள நிலையில் அதிலும் அழகான புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்.

ஒருவார கால சூட்டிங்: நடிகர் விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோலுடன் இணைந்து உற்சாகமாக பூஜா ஹெக்டே பேசிக் கொண்டிருந்ததை கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் பார்க்க முடிகிறது. இந்த படத்தின் சூட்டிங் நாளைய தினம் சென்னையில் துவங்கவுள்ள நிலையில் தொடர்ந்து பாடல் காட்சிக்கான சூட்டிங்கை ஒரு வாரக்காலம் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சியில் பூஜா ஹெக்டே பங்கேற்பாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும். இந்த ஷூட்டிங்கை ஒரு வார காலத்தில் நிறைவு செய்துவிட்டு, தொடர்ந்து விஜய் தன்னுடைய அரசியல் மாநாட்டிற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

பீஸ்ட் படத்தின் காம்போ: இதையடுத்து தளபதி 69 படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து தெரியவரும். முன்னதாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் பூஜா ஹெக்டே. இவர்கள் கூட்டணியில் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் தற்போது தளபதி 69 படத்திலும் அனிருத் மேஜிக்குடன் இணைந்து இவர்கள் காம்பினேஷன் ரசிகர்களை எப்படி உற்சாகப்படுத்தும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X