'எந்தன் உயிர்' வின்னர் பாடலுக்கு முன்னாள் ஹீரோயின் வேறலெவல் ஆக்‌ஷன்.. இன்னும் அப்படியே இருக்காராமே!

By

சென்னை: வின்னர் பட பாடலுக்கு முன்னாள் ஹீரோயின் நடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.

தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, பிரசாந்தின் வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சர்வர் சுந்தரம்

சர்வர் சுந்தரம்

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டனின் உறவினர். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வராததால் கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். கார்த்தியின் சகுனி, விஷாலின் ஆம்பள படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த கிரண், அடுத்து சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வாவ் சொல்ல வைத்தன. அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் கடுமையாகக் கலாய்த்தனர்

View this post on Instagram

🥰

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

கண்ணடிக்கும் வீடியோ

சில ரசிகர்கள் 'மேடம்.. தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு நிஜமாகவே வயசாயிடுச்சு' என்று கூறியிருந்தனர். பின்னர் கண்ணடிக்கும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவும் வைரலானது. இந்நிலையில் புதிய வீட்டியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார்.

எந்தன் உயிர் தோழியே

எந்தன் உயிர் தோழியே

அதில், அவர் நடித்த வின்னர் படத்தில் இடம்பெறும், எந்தன் உயிர் தோழியே கண்திறந்து பார்த்தாய்' என்ற பாடலுக்கு ஸ்டைலாக, தலையை தூக்கிவிட்டபடி, மாடர்ன் லுக்கில் அவர் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் தாராளமாக லைக் செய்துள்ளனர். சிலர், இந்தப் பாடலை என் கல்லூரி காலத்துல ரொம்ப ரசித்தேன் என்றும் இந்த பாடல் காட்சியில் நீங்க ரொம்ப அழகா இருப்பீங்க என்றும் கூறியிருந்தனர்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க

இந்தப் பாடல் காட்சியில் கொஞ்சம் கிளாமராக நடித்திருப்பார் கிரண். சிலர், அந்த லுக்ல இந்த பாட்டுக்கு ஆடியிருந்தா நல்லாருக்கும் என்று தெரிவித்துள்ளனர். சிலர், அப்போ பார்க்கும்போது எப்படி இருந்தீங்களோ, இப்பவும் அப்படியே இருக்கீங்க, நிஜமாகத்தான்' என்று கலாய்த்துள்ளனர். மீண்டும் நடிக்க வாங்க மேடம். உங்களை ஸ்கிரீன்ல பார்க்க ஆசையா இருக்கு என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X