நன்றி கூட சொல்லத் தெரியாத நித்யா மேனன்.. உதவி செய்தவரை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் நித்யா மேனனும் உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் காதலிக்க நேரமில்லை படம் தான். இந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது மட்டும் இல்லாமல், பலரது கவனத்தையும் ஈர்த்தது.

காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி மோகனுடன் இணைந்து நடித்தார். கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாகவும், கதை மற்றும் திரைக்கதையாக படம் நல்ல படம் என்றும் பாராட்டுகளை குவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை நித்யா மேனனுக்கு ஒருவர் உதவி செய்தார். ஆனால் அவருக்கு உதவியவருக்கு நடிகை நித்யா மேனன் நன்றி கூட தெரிவிக்கவில்லையாம்.

அதாவது, நடிகை நித்யா மேனன் காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வேகமாக வரும்போது, நித்யா மேனன் தனது ஐ பேட்-ஐ தவர விட்டுள்ளார். இதனைப் பார்த்த ஊடகவியலாளர் ஒருவர் அந்த ஐ பேட்-ஐ எடுத்து நித்யா மேனனிடம் கொடுக்க ஓடியுள்ளார். ஆனால் நித்யா மேனன் அவசர அவசரமாக தனது காரில் ஏறிச் சென்றுள்ளார்.

Fans Getting Shock Nithya Menen Behaviour on Journalist

நித்யா மேனன்: அதன் பின்னர் என்ன செய்வது என யோசித்த அந்த ஊடகவியலாளர், நித்யா மேனன் தற்போது எந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார். அதன்படி, காதலிக்க நேரமில்லை படத்தின் பி.ஆர்.ஓ-வைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறி நித்யா மேனனிடம் ஐ பேட்-ஐ ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் ஊடகவியலாளரை உடனே படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்துள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் நித்யா மேனனைப் பார்த்த ஊடகவியலாளர் உடனே அவரது ஐ பேட்-ஐக் கொடுத்துள்ளார்.

நன்றி: ஐ பேட்-ஐ வாங்கிய நித்யா மேனன், உடனே ஊடகவியலாளரைப் பார்த்து, இதை நீங்கள் திறந்து பார்த்தீர்களா எனக் கேட்டுள்ளார். இந்த கேள்வியை எதிர்பார்க்காத ஊடகவியலாளருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் இதையெல்லாம் ஓபன் செய்து பார்க்கவில்லை, அது எனது வேலையும் இல்லை எனக் கூறிவிட்டு அங்கிருந்து உடனே புறப்பட்டு சென்றுள்ளார்.

Fans Getting Shock Nithya Menen Behaviour on Journalist

அழகு: இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள், என்ன தேசிய விருது வாங்கிய நடிகைக்கு, தனக்கு உதவி செய்தவருக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாதா? நன்றி சொல்லவில்லை என்றாலும் உதவி செய்தவரை நோக்கி அவரது மனதை காயப்படுத்தும் கேள்விகளைக் கேட்கலாமா என்றெல்லாம் பேசி வருகிறார்கள். சினிமா நடிகையின் ஐ பேட் என்பதால் அதை மற்றவர்களிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னால், நடிகையிடம் சரியாக போய்ச் சேருமோ சேராதோ என்ற எண்ணத்தில், ஊடகவியலாளரே நேரடியாக கொண்டு சென்று கொடுத்துள்ளார். ஆனால் நடிகை நன்றி கூட கூறாமல், தனக்கு உதவியவரை சந்தேகப்பட்டது சரியல்ல எனவும் பேசி வருகிறார்கள். தேசிய விருது பெற்ற நடிகையாகவே இருந்தாலும் நன்றி சொல்லும் குணம் இருந்தால் தான் அழகு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X