என்ன வேணும் உனக்கு.. த்ரிஷா போட்ட ட்வீட்.. ரசிகர்கள் போட்ட லிஸ்ட்டை பார்த்தீங்களா?
சென்னை: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நீல நிற உடையில் தகதகவென கடல் கன்னியாகவே ஜொலித்த நடிகை த்ரிஷா அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சுகர் பேபி பாடலின் முதல் வரியான "என்ன வேணும் உனக்கு" என்பதையே ட்வீட்டாக தற்போது பதிவிட ரசிகர்கள் வித விதமான லிஸ்ட்டுகளை அடுக்கி சோஷியல் மீடியாவையே டிரெண்டாக்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அசின், ஜெனிலியா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், டாப் ஹீரோயினான த்ரிஷா மட்டும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே தக் லைஃப் தலைவியாக வாழ்ந்து வருகிறார்.

வரும் ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து படக்குழுவினர் உடன் பல்வேறு நகரங்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார். அதிலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சமீபத்தில் த்ரிஷா நடனமாடிய 'சுகர் பேபி' பாடல் வெளியாகி வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.
என்ன வேணும் உனக்கு: கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் பெரியளவில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களுமே ஃபயர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற்னர். அதிலும், த்ரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட 'சுகர் பேபி' பாடலில் வரும் "என்ன வேணும் உனக்கு" வரிகளை தற்போது ட்வீட்டாக போட்டு ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக கவர்ந்துள்ளார் த்ரிஷா.
நீ தான் வேணும்: நடிகை த்ரிஷா இப்படியொரு ட்வீட்டை போட்டதுமே ஏகப்பட்ட ரசிகர்கள், "நீ தான் வேணும் எனக்கு என்றும் கட்டிக்கிறியா என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகை த்ரிஷாவின் தீவிர ரசிகர்கள் அவர் எப்போதுமே இப்படியே ஹேப்பியாக இருக்க வேண்டும் என கமெண்ட் போட்டுள்ளனர்.
பிராந்தி ஒரு ஃபுல்லு: வடிவேலுவின் காமெடியை வைத்து ஏற்கனவே ஏகப்பட்ட வீடியோ மீம்கள் 'சுகர் பேபி' பாடலை ட்ரோல் செய்து வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவையும் த்ரிஷா ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டாக போட்டுள்ளனர். "பிராந்தி ஒரு ஃபுல்லு.. பீரு ஒரு ஃபுல்லு" என வடிவேலு போடும் லிஸ்ட்டை போட்டுள்ள நெட்டிசன்கள் த்ரிஷாவிடம் மேலும், சில கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.
லியோ 2 அப்டேட்: நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என அவரே அறிவித்தாலும் விஜய் ரசிகர்களே, வ்ஜய் அரசியலுக்கு எல்லாம் சென்றாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்த நிலையில், லியோ 2 அப்டேட் மட்டும் வாங்கிக் கொடு தலைவி என கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், அந்த பாட்டு மண்டைக்குள்ள ஒரு மாதிரி ஓடிட்டு இருக்கு உள்ளிட்ட ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் சில மோசமான கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











