குழந்தையை வைத்து இப்படி செய்கிறாரே அமலா பால்?.. எல்லாமே பணத்துக்காகவா?.. ரசிகர்கள் கண்டனம்

சென்னை: அமலா பால் தமிழில் ஒருகாலத்தில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்த அவர்; அடுத்ததாக ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இலை என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் குழந்தையை வைத்து அமலா பால் செய்திருக்கும் செயல் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அமலா பால்; முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை ஏற்று கவனம் ஈர்த்தவர். அந்த ரோலை அவர் ஏற்றிருந்தது விமர்சனத்தை சந்தித்தாலும் அவரது நடிப்பு பாராட்டும்படிதான் இருந்தது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அமலாவின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது.

டாப் நடிகை: அதன்படி விஜய், ஆர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அமலா பால் டாப் 10 நடிகைகள் லிஸ்ட்டில் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்த அவர் தலைவா படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். இந்தக் காதல் அனைவருக்குமே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. பிறகு வீட்டு சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.

விவாகரத்து செய்துகொண்ட ஜோடி: இரண்டு பேரும் சுமூகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து நடந்தது. விஜய் - அமலா பாலின் விவாகரத்துக்கு காரணங்களாக ஏகப்பட்ட யூகங்கள் சொல்லப்பட்டன. சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. அமலாவை பிரிந்த விஜய் இன்னொரு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

Fans have condemned Amala Paul s video featuring her baby
Photo Credit:

அமலா பாலின் திருமணம்: விஜய்யை பிரிந்த பிறகு கொஞ்ச காலம் சிங்கிளாக இருந்த அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் இலை என்ற மகன் இருக்கிறார். இப்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். தனது மகனின் செயல்பாடுகளை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

விமர்சனத்தை சந்தித்த வீடியோ: அந்தவகையில் அவர் இப்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. அதாவது, குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் உடைகளை அமலா பால் கொடுத்து விளையாடும்படி அந்த வீடியோ அமைந்திருக்கிறது. ஆனால் அதே வீடியோவில் போகிற போக்கில் அந்த உடைகளை தயாரித்த நிறுவனத்தை ப்ரோமோட் செய்யும்படியும் இருக்கிறது.

இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'குழந்தையுடன் விளையாடுவது எல்லாம் நல்ல காரியம்தான். ஆனால் அமலா பால் செய்ததை பார்த்தால் விளையாடுவது மட்டுமின்றி அந்த நிறுவனத்துக்கு ப்ரோமோஷன் செய்வது போன்றும் இருக்கிறது. குழந்தையை வைத்துக்கொண்டு ஏன் இப்படி செய்ய வேண்டும்' என கேள்வி எழுப்பி விமர்சனத்தை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X