வெட்டி வெச்ச கேக்காக ஜொலிக்கும் திவ்ய பாரதி.. புடவையில் மினுக்குறாங்களே.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: நடிகை திவ்ய பாரதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட திவ்ய பாரதி தமிழ் தெளிவாக பேசத் தெரிந்த இளம் நடிகை. இவர் இதுவரை தமிழில் மூன்று படங்கள்தான் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவராக உள்ளார். பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கிறார்கள். திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திவ்ய பாரதி, அதன் பின்னர் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அதாவது பிளாஷ்பேக்கில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார். அதேபோல் தெலுங்கில், கோட் என்ற படத்தில் நடித்தார், ஆனால் இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. தமிழில் அவர் நடித்த முதல் படமான பேச்சுலர் படத்தில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம் அவரது கிளாமர்.

அதாவது பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் இணைந்து, செம க்ளோஸான காட்சிகளில் நடித்தார். இது தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. லிப் லாக் காட்சியில் அசால்ட்டாக நடித்ததால் இவரை ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. திவ்ய பாரதி சினிமாவுக்கு வருவதற்கு முன்னர், மாடலிங் செய்து கொண்டிருந்தவர். இப்போதும் மாடலிங் செய்து கொண்டுதான் உள்ளார். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்ததால், வாய்ப்பு கிடைத்ததும் அதை பயன்படுத்திக் கொண்டு, சினிமாவில் கால் பதித்து ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.

Fans Likes And Comments Divya Bharathi Instagram Recent Photos With Saree

ஜி.வி. - சைந்தவி: கடந்த ஆண்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும், அவரது மனைவி பாடகி சைந்தவி தம்பதியர் விவாகரத்து பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க, இணையத்தில் பலர் அவர்கள் பிரிவுக்கு காரணம், திவ்ய பாரதி தான் எனக் கூறி திவ்யபாரதியை அட்டாக் செய்தார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத திவ்யபாரதி அதிர்ச்சி அடைந்தார். திவ்ய பாரதி என்ன பதிவு போட்டாலும் உடனே கமெண்ட் செக்‌ஷனில் அவரைத் திட்ட ஆரம்பித்த குரூப்களும் உள்ளது. இப்போதுதான் அது கொஞ்சம் அடங்கியுள்ளது.

திவ்யபாரதி: அதற்கு காரணம் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு கான்செர்ட்டில் பாடினார்கள். இது தொடர்பாக பேசும் போது கூட அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் என நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அப்போதும் என்னைத்தான் திட்டுகிறார்கள் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். திவ்ய பாரதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் கிங்ஸ்டன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வி படமாக மாறியது. இதனால் படக்குழுவினர் கப்-சிப் என இருப்பதுடன், அடுத்த வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டனர்.

Fans Likes And Comments Divya Bharathi Instagram Recent Photos With Saree

இன்ஸ்டாகிராம்: திவ்யபாரதி தமிழில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவர் இன்ஸ்டாகிராமில் தற்போது தான் சேலை கட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெட்டி வைத்த கேக் போல ஜொலிக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X