Trisha: த்ரிஷா முடியை பிடிச்சு இந்த ஆட்டு ஆட்டுறாரே.. யார் இந்த ஆண் பிரபலம்னு பாருங்க?
சென்னை: நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் தமிழில் இரண்டு படங்கள், மலையாளத்தில் ஒரு படம் என மொத்தம் மூன்று படங்கள் வெளியானது. அதன் பின்னர் சூர்யாவின் கருப்பு படத்தில் கமிட் ஆனார். அந்த படமும் வரும் ஆண்டில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் தலைமுடியைப் பிடித்து ஒருவர் குலுக்குவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை த்ரிஷா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை. மூத்த நடிகை என்று குறிப்பிட்டாலும் இவர் இப்போதும் முன்னணி கதாநாயகர்களின் முதல் தேர்வில் உள்ளார். மாடலிங்கில் இருந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர். தொடக்கத்தில் நடிகைகளின் தோழி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் மௌனம் பேசியதே படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்தார். இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கி இருந்தார்.

த்ரிஷா: அதன் பின்னர் இளம் நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் உடன் இணைந்து கில்லி படத்தில் நடித்த பின்னர் இவரது மார்க்கெட் வேற லெவலில் உயர்ந்தது. அதன் பின்னர், அஜித், கமல், ரஜினி என மூத்த நடிகர்களுடனும் நடித்தார், இளம் நடிகர்களுடனும் இணைந்து நடித்தார். தமிழ் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தினார். தற்போது இவருக்கு இணையான நடிகை என்று பார்க்கப்படுபவர் என்றால் அது நடிகை நயன் தான்.
திருமணம்: த்ரிஷாவுக்கு 42 வயது ஆகிறது. ஆனால் அவர் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது அவரது ரசிகர்களின் பல நாள் கேள்வியாகவும் கோரிக்கையாகவும் உள்ளது. அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் அவர் குறித்து வந்தாலும், நடிகை அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது சினிமா வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சில நேரங்களில் அப்படியான கிசுகிசுக்களை அவரே கிண்டல் செய்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
வீடியோ: இப்படி இருக்கும்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷாவின் தலைமுடியைப் பிடித்து ஒருவர் ஆட்டு ஆட்டு என்று ஆட்டுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் முதலில் ஷாக் ஆகி உள்ளார்கள். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு, அவர் ஹேர் ஸ்டைலிஸ்ட் என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். வசீம் என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் தான் அவர். இந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் நடிகை த்ரிஷாவின் மிகவும் ஃபேவரெட்டான ஹேர் ஸ்டைலிஸ்ட்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் தலைமுடியை வசீம் அலங்கரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











