ஒரு பூவே பூ பறிக்கிறது.. பிரியங்கா மோகனை வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகன் இப்பொழுது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டுள்ளார்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்து வருகிறார்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் பூக்களை பறிக்கின்ற அழகிய புகைப் படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

அறிமுகமே அட்டகாசமாக

அறிமுகமே அட்டகாசமாக

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற கேங் லீடர் படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா அருள்மோகன் இப்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார் அறிமுகமே அட்டகாசமாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த டாக்டர் திரைப்படம் வெளியாகி பட்டையைக் கிளப்பி மாபெரும் வசூல் செய்தது. இந்த படத்தில் க்யூட்டான நடிகையாக மட்டும் வந்து செல்லாமல் காமெடியிலும் கலக்கி இருந்த பிரியங்காவுக்கு தமிழில் இப்பொழுது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

இருவருக்கும் கெமிஸ்ட்ரி

இருவருக்கும் கெமிஸ்ட்ரி

டாக்டர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படப்படப்பு மொத்தமும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். டாக்டர் படத்தைப்போலவே இருவருக்கும் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது

Recommended Video

Katrukkenna Veli சீரியலில் இருந்து வெளியேறும் Vennila | Priyanka Kumar, Adhuri Lover
பொம்மை போல க்யூட் நடனம்

பொம்மை போல க்யூட் நடனம்

தொடர்ந்து குடும்பப் படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்று வரும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற படம் உருவாகி வருகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துவரும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து சும்மா சுர்ருன்னு பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா ஜொலிக்கும் காஸ்டியூமில் அட்டகாசமான நடனமாடி இருக்கின்றனர். குறிப்பாக பொம்மை போல ஆடும் பிரியங்காவின் க்யூட் நடனம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஒரு பூவே பூ பறிக்கிறது

ஒரு பூவே பூ பறிக்கிறது

இவ்வாறு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்களை பறிக்கும் , பூக்களுக்கு நடுவே நின்றுகொண்டு உள்ள அழகிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு பூவே பூ பறிக்கிறது என்றும் எது பூ என்றே தெரியவில்லை என்றும் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X