பட்டர்ஃபிளை.. பட்டர்ஃபிளை.. பாவம்டா பிரியங்கா மோகன்.. துணை முதல்வர் ஜோடியை இப்படி டேமேஜ் பண்ணலாமா?

சென்னை: டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் சமீப காலமாக கோலிவுட்டில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ள நிலையில், கடைசியாக தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அதன் லிரிக் வீடியோ வந்தபோது பெற்றது. மேலும், பிரியங்கா மோகன் நடனம் ஆடி இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அதன் வீடியோ பாடலை பார்க்க ரொம்பவே ஆவலாக இருந்தனர்.

Fans roasts Priyanka Mohan for her latest NEEK Golden Sparrow dance

ஆனால், சமீபத்தில் வெளியான வீடியோ பாடலை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகன் நடனத்தை அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

டாக்டர் முதல் பிரதர் வரை: தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வந்த பிரியங்கா மோகன் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்திலும் அதே ஜோடி இணைய மீண்டும் ஒரு நூறு கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தினர்.

தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிதாக வெற்றி பெறவில்லை. தீபாவளிக்கு வெளியான ரவி மோகனின் பிரதர் திரைப்படமும் பிரியங்கா மோகனுக்கு தோல்வியையே கொடுத்தது. முன்னதாக சூர்யாவுடன் இணைந்து அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படமும் கை கொடுக்கவில்லை. சிவகார்த்திகேயனை தவிர தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களுடன் பிரியங்கா மோகன் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து விட்டன.

ஒரு பாடலுக்கு நடனம்: தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு மடிசார் அணிந்த மாமியாக கேமியோ ரோலில் வந்து நடனமாடி சென்றிருந்தார் பிரியங்கா மோகன். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ பாடல் காரணமாக பிரியங்கா மோகன் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

பட்டர்பிளை பட்டர்பிளை பாடல்: சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரீல்ஸ்கள் மூலம் ட்ரெண்டான "பட்டர்பிளை பட்டர்பிளை வேர் ஆர் யூ கோயிங்" பாடல் வீடியோவுக்கு ஏற்றவாறு குழந்தைகள் நடனம் ஆடுவதைப் போல பிரியங்கா மோகன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடனமாடியுள்ளார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

துணை முதல்வர் படம்: மீண்டும் தெலுங்குக்கு சென்ற பிரியங்கா மோகன் நடிப்பில் விரைவில் பவன் கல்யாண் நடித்த ஓஜி திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஆந்திராவின் துணை முதல்வருக்கே ஜோடியான பிரியங்கா மோகனை இப்படி அசிங்கப்படுத்தலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏகப்பட்ட இளம் நடிகைகள் கோலிவுட்டுக்கு படை எடுத்து வந்துள்ள நிலையில் பிரியங்கா மோகனுக்கு பழையபடி கோலிவுட்டில் வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X