பெரிய வீட்டு மருமகளாகப்போகும் சமந்தா?.. யப்பா வெயிட்டான குடும்பமாச்சே.. இது என்ன புதுசா இருக்கு
சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா நடித்திருப்பதால் இந்த சீரிஸ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த சீரிஸ் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது என்றாலும் சமந்தாவின் நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக அவர் ஸ்கோர் செய்திருந்தார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. இருவரும் நல்லபடியாக வாழ்ந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேருமே பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். காதல் திருமணம் செய்தும் விவாகரத்தா என்றெல்லாம் பலரும் பேசினார்கள். ஆனால் இந்த விவாகரத்துக்கு முழுக்க முழுக்க சமந்தாதான் காரணம் என்று தரப்பினரும்; இல்லை நாகார்ஜுனாவின் குடும்பம்தான் காரணம் என்று இன்னொரு தரப்பினரும் கூறினார்கள்.

பிஸி நடிப்பு: ஆனால் சமந்தா எதற்கும் பதில் சொல்லாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினார். விவாகரத்துக்கு பிறகு சமந்தாவால் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடியாது என்று பேசியவர்களை வாயடைக்க வைத்தார். புஷ்பா படத்தில் அவர் போட்ட கவர்ச்சி நடனம் அவரது கரியரை மேற்கொண்டு உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றில் நடிப்பதற்கும் அவர் கமிட்டானார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
விழுந்த இடி: ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். பிறகு சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே சமந்தாவின் கரியரிலேயே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதனையடுத்து மீண்டும் குட்டி பிரேக் எடுத்த அவர்; இப்பொது ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
நல்ல வரவேற்பு: இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார். வெப் சீரிஸுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் சமந்தாவின் நடிப்புக்கு சூப்பரான வரவேற்பு கிடைத்தது. அதிலும் லிப் லாக் சீன், ஆக்ஷன் சீன் என சமந்தா வேறு மாதிரி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் சில படங்களில் அவர் நடிப்பதற்கு கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மீண்டும் காதல்?: அது என்னவென்றால் அவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்துவருவதாக புதிய பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதையை பகிர்ந்திருந்தார். அந்த போஸ்ட்டின் கமெண்ட் செக்ஷனில் அர்ஜுன் கபூர், 'இந்தக் கவிதையின் பிரிண்ட் எனது வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார். அதற்கு சமந்தா ஹார்ட்டின் பறக்கவிட்டார். இதனை கவனித்த நெட்டிசன்களில் ஒருதரப்பினர், அட அர்ஜுன் கபூருக்கும் சமந்தாவுக்கும் டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கிறதே. சமந்தாவும் ஹார்ட் விடுறாரே.
ஒருவேளை இருவரும் காதலிக்கிறார்களோ. திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களோ என்று திரியை கொளுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இதில் அவ்வளவாக உண்மை இல்லை. ஏனெனில் இரண்டாவது திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று சமந்தா கூறியிருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர் இன்னொரு தரப்பு ரசிகர்கள். இதற்கிடையே அர்ஜுன் கபூர் சமீபத்தில்தான் நடிகை மலைக்கா அரோராவை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications