பூனம் பாண்டேவுக்கு 'பிரா'மாதமான 'கேக்' கொடுத்து அசத்திய ரசிக மக்காஸ்...!
மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவுக்கு செமத்தியான, அட்டகாசமான கேக்கைப் பரிசாகக் கொடுத்து அவரது பிறந்த நாளை கலகலப்பாக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
என்ன மாதிரியான கேக் கொடுத்திருப்பார்கள் என்று யாருமே ஈசியாக ஊகிக்க முடியாத அளவுக்கு ஒரு பரிசை அவருக்கு பிறந்த நாளன்று கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.
அது வேறு ஒன்றுமில்லை. அழகான பிரா வடிவிலான கேக்தான் ரசிகர்கள் கொடுத்த பரிசு.

கவர்ச்சி பாண்டே
பூனம் பாண்டே யாரென்றே பலருக்கும் தெரியாத நிலையில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நேரம் பார்த்து சரியான நேரத்தில் கலக்கலான அறிவி்ப்புடன் இந்திய மக்களின் மனதில் என்ட்ரி ஆனவர் பூனம்.

தொடர் கவர்ச்சி..
அதன் பிறகு அவர் தொட்ட இடமெல்லாம் கவர்ச்சி மழைதான். அவரைப் பற்றி எந்த நியூஸ் வந்தாலும் அதில் கவர்ச்சிதான் மேலோங்கியிருக்கும். அப்படித்தான் அவர் செய்திகளுக்கு உரமாக அமைந்தார்.

பிறந்த நாள் களேபரம்
இந்த நிலையில்தான் கடந்த வாரம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் பூனம். அதையொட்டி அவரது ரசிகர்கள் பூனத்தை அசத்தி விட்டனர் கலக்கலான பரிசைக் கொடுத்து.

பிரா வடிவ கேக்
பூனம் பாண்டேவுக்கு அழகிய ரோஸ் நிற பிரா வடிவிலான கேக்கை அனுப்பி வைத்து பிரஸெட் விஷஸ் என்றும் குறும்புத்தனமான வார்த்தையை கேக் மேல் பொறித்து அனுப்பி விட்டனர்.

கப் கேக் பழசு.. பிரா கேக் புதுசு...
கப் கேக் பார்த்திருக்கிறோம், கடைகளில் தாராளமாக கிடைக்கும். ஆனால் பிரா கேக் இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறோம்...
எப்படியெல்லாம் யோசிக்க வைக்குதய்யா இந்த கவர்ச்சி மாயை....வாழ்த்துகள் மேடம்!


Click it and Unblock the Notifications











