பார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: ஆடை படத்தின் நடிகை அமலா பால் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகை அமலா பாலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஆடை. இந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தார். இதனால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார் அமலா பால்.
இருப்பினும் படம் வெளியான பிறகு அமலா பாலின் நடிப்பு பாராட்டப்பட்டது. படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்களே எழுந்தன.

வீட்டில் ஓய்வு
ஆனால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த காரணத்திற்காக அடுத்தடுத்து ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் இது ஓய்வுக்கான காலம் என மனதை தேற்றிக்கொண்ட அமலா பால், பாண்டிச்சேரியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

சர்ச்சை கதைதான்
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள அமலா பால் தெலுங்கில் ரீமேக்காகும் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இதுவும் ஒரு சர்ச்சையான ஸ்டோரிதான்.
Also, it's my birthdayyy week - 💟☮💫 ! Hey fam, can you guess where I'm off to?
.
.#vacaymode #jetsetgo #goodvibesalways #gypsysoul pic.twitter.com/R2TriT1sPy — Amala Paul ⭐️ (@Amala_ams) October 21, 2019 '>
அந்தரத்தில்
இந்நிலையில் அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு வாச கால்களுக்கு மத்தியில் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

நான்தான்
அந்த போட்டோவில் கைகளை நீட்டியப்படியும் சிரித்தப்படியும் மிகவும் சந்தோஷமாக உள்ளார் அமலா பால். மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு யார் நல்ல தகுதியான விடுமுறையை எடுக்கிறார்கள் யூகியுங்கள் என்ற அவர், நான்தான் என்றும் பதிலளித்திருக்கிறார்.

கவனமாக இருங்கள்
மேலும் இது என்னுடைய பிறந்தநாள் வாரம்.. நான் எங்கே இருக்கிறேன் என சொல்லுங்கள் என் குடும்பமே என்றும் கேட்டிருக்கிறார் அமலா பால். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பார்த்து கவனமாக இருங்கள் என அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
பாதுகாப்பாக இருங்கள்
உங்களுக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் அன்பும் எப்போதும் இருக்க வேண்டும் என இந்த சிறப்பான நாளில் வாழ்த்துகிறேன்.. அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய பயணம் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
பார்த்து கண்ணு பார்த்து
பார்த்து கண்ணு பார்த்து.. என அக்கறையுடன் டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











