கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க மேடம்..கர்ப்பமா இருக்கும் போது பிகினியில் பீச்சில் கும்மாளம் போடும் நடிகை!
சென்னை : கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் கணவனோடு பிகினியில் கும்மாளம் போட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் கர்ப்பமாக இருக்கும் போது, கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க என அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
பூஜா ராமச்சந்திரன் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களில் மட்டுமில்லாமல், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பூஜா ராமச்சந்திரன்
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட பிறந்த பூஜா ராமச்சந்திரன், தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜான் கொக்கைன்
நடிகர் ஜான் கொக்கைன் பாகுபலி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து, கேஜிஎஃப் திரைப்படத்தில் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஜான் கொக்கைன், அஜித்தின் துணிவு படத்திலும், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

குட் நியூஸ் சொன்ன தம்பதியினர்
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும், வீக் எண்ட் ஆனாலே போது, ஜாலியாக சைக்கிளிங் போவது, மலையேறுவது, நீச்சல் குளத்தில் ஆட்டம்போடுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருவார்கள். கடந்த டிசம்பர் மாதம் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை இருவரும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தனர்.

கண்ட்ரோலா இருங்க மேடம்
பூஜா கர்ப்பமாக இருந்த போதும், முன்பு இருந்ததை போல, அதே ஜாலியுடன் வீக் எண்டை செலபிரேட் செய்து வருகின்றனர். தற்போது, பூஜா ராமச்சந்திரன் தனது கணவருடன் பீச்சில் பிகினில் கைகளை கோர்த்தபடி கும்மாளம் போட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்ஸ் கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க மேடம் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

பார்த்தாலே பதறுதே
அதேபோல நடிகை பூஜா ராமச்சந்திரன் வயிற்றில் குழந்தையுடன் தலைக்கீழாக நின்றப்படி யோகா செய்த வீடியோ இணையத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே பதறுதே கர்ப்பமாக இருக்கும் போது இப்படி செய்யலாமா என கேட்டுவந்தனர்.


Click it and Unblock the Notifications











