கன்னத்தில் ரத்தக் காயங்களுடன் குஷ்பு பகிர்ந்த போட்டோ...பதறி போன ரசிகர்கள்
சென்னை : கன்னத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கும் போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து விட்டு ரசிகர்களும், பிரபலங்களும் பதறிப் போய், என்னச்சு குஷ்புவிற்கு என கவலையுடன் கேட்டு வருகின்றனர்.
1980 களில் துவங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயினாகவும் கலக்கியவர் குஷ்பு. இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு சினிமா, அரசியல், சின்னத்திரை என தற்போதும் கலக்கி வருகிறார். நடிகைகளில் முதல் முறையாக கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு தான். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தவர்.

அப்போவே நாங்க டாப்
ரஜினி, கமல் துவங்கி அத்தனை டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த குஷ்பு, டைரக்டர் சுந்தர்.சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் பல நாடகங்களில் பிஸியாக நடித்தார் குஷ்பு. 20 வருடங்களுக்கு முன்பே சின்னத்திரையில் அறிமுகமாகி தயாரிப்பு, நடிப்பு என கலக்கி வருபவர் குஷ்பு.

சீரியலில் ரீஎன்ட்ரி
சமீப காலமாக அரசியலில் பிஸியாக இருந்த குஷ்பு, ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க துவங்கி விட்டார். அதிலும் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி விட்டதால் குஷ்பு மீண்டும் ஹீரோயினாக நடிக்க போகிறாரா என்று கூட சிலர் கேட்டனர். கோகுலத்தில் சீதை சீரியலில் கெஸ்ட் ரோல் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் குஷ்பு.
Recommended Video

குஷ்புவின் புதிய அவதாரம்
நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர், கிரியேட்டிவ் டைரக்டர் என்பதை தாண்டி தற்போது சீரியல் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் குஷ்பு. கலர்ஸ் தமிழில் ஒளிப்பாரக இருக்கும் மீரா என்ற புதிய சீரியல் மூலம் சீரியல் எழுத்தாளராகவும் குஷ்பு அறிமுகமாக உள்ளார். அதோடு இந்த சீரியலில் டைட்டில் ரோலான மீரா கேரக்டரில் அவரே நடிக்கிறார். இந்த தொடரில் பிரபல நடிகர் மைக் மோகனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் சமீபத்தில் பூஜையுடன் துவங்கப்பட்டது.

கன்னத்தில் ரத்த காயங்களுடன் குஷ்பு
சீரியல் வேலைகளில் பிஸியாக இருந்த குஷ்பு, இன்று தனது இன்ஸ்டாகிராமில் கன்னத்தில் கைதடம் பதிந்த ரத்த காயத்துடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்தார். இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பதறிப் போயினர். சுந்தர்.சி கூட இப்போது ஊரில் இல்லையே. கடந்த ஒரு மாதமாக புது பட ஷுட்டிங்கிற்காக ஊட்டியில் இருக்காரே என பலர் கேட்க துவங்கி விட்டனர். பிறகு தான் அவரின் கேப்ஷனை பார்த்து விட்டு, அட இது தானா என அமைதியாகினர். மீரா சீரியலில் வரும் போட்டோவை தான் குஷ்பு பகிர்ந்துள்ளாராம். மற்றபடி இது நிஜமான காயம் கிடையாதாம்.


Click it and Unblock the Notifications











