மஞ்சத்தாலி காணோம்.. கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மின்னும் புது சரடு.. சிங்கப்பல் கணக்கா இருக்கே!

சென்னை: நடிகை சமந்தா ஓடிடி வெப்சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில், முதன்முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடித்துள்ள நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வெப்சீரிஸுக்கு 'அக்கா' என டைட்டில் வைத்து அதன் ஆக்ரோஷமான டீசரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் இந்த 2025ம் ஆண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட பெரிய படங்களையும் வெப்சீரிஸ்களையும் படையல் போட காத்திருக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், மாதவன், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

keerthy suresh netflix

கடைசியாக பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மஞ்சக் கயிற்றுடன் காட்சியளித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது கழுத்தில் சிங்கப்பல் டிசைன் டாலருடன் சரடு அணிந்திருந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

keerthy suresh netflix

மஞ்சத்தாலி காணோம்: நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் ரகசிய காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்துக்கு விஜய், த்ரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்ற கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மஞ்சத்தாலியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் டிரெண்டாகின. திருமணத்துக்குப் பிறகும் நடிகைகள் நிகழ்ச்சிகளில் தாலியுடன் பங்கேற்பது சிறப்பான விஷயம் என்றும் பாலிவுட் நடிகைகள் எல்லாம் இதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என பலர் கீர்த்தி சுரேஷை பாராட்டினர். ஆனால், அக்கா வெப்சீரிஸின் டீசர் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மஞ்சத்தாலியை காணோமே என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

சிங்கப்பல் செயின்: நடிகை கீர்த்தி சுரேஷ் ஐவரி நிற சேலையை அணிந்துக் கொண்டு கழுத்தில் சிங்கப்பல் போன்ற டிசைன் கொண்ட டாலருடன் கூடிய சரடு அணிந்து வந்திருந்தது அனைவரது கண்களையும் அப்படியே பறித்து விட்டது. தாலி பிரித்துப் போட்டு சரடு மாற்றிவிட்டாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், 'அக்கா' டீசர் பார்த்தவர்களுக்குத்தான் இந்த செயினின் உண்மையான ரகசியம் தெரியும்.

keerthy suresh netflix

அக்கா வெப்சீரிஸ் டீசரில்: யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 'அக்கா' வெப்சீரிஸில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளனர். அந்த வெப்சீரிஸ் டீசரிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதே செயினை தான் அணிந்து நடித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே நேற்று அதனை புரமோட் செய்யும் விதமாக அந்த செயினை கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthy suresh netflix

ரிவால்வர் ரீட்டா வருது: விஜய்யின் அட்மினாக இருந்து தயாரிப்பாளராக மாறியுள்ள ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படமும் சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து துப்பாக்கியுடனே கீர்த்தி சுரேஷ் சுற்றித் திரிகிறாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். தமிழில் மேலும், சில படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X