நயன்தாரா மீது இருந்த மரியாதையே போய்விட்டது.. ஆவணப் படத்தில் இப்படியா?.. ரசிகர்கள் கொந்தளிப்பு

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றிய ஆவணப்படம் Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் ரிலீஸானது. இந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த நயனும், விக்னேஷும் தனுஷிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் தனுஷ் கொடுக்கவில்லை. இருப்பினும் ட்ரெய்லரில் மூன்று நொடிகள் நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பயன்படுத்தியதால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார் தனுஷ்.

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இருவருக்குமான திருமணத்துக்கு வந்தவர்கள் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

nayanthara vignesh shivan dhanush

ஆவணப் படம்: அதனையடுத்து தங்களது திருமணம் தொடர்பான வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய்க்கு நயனும், விக்கியும் விற்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நயன் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி நயனின் திருமணம் மற்றும் அவரது வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், அனுபவங்கள் பற்றிய ஆவணப் படம் Nayanthara Beyond The Fairy Tale வெளியானது.

சுமாரான வரவேற்பு: அந்த ஆவணப் படத்தில் நயன் இதுவரை சந்தித்த பிரச்னைகள், அதனை அவர் கடந்து வந்த விதம் உள்ளிட்டவைகள் இருந்தன. மேலும் அவர் பற்றி விக்னேஷ் சிவன், நயனின் தாய், நயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர், நடிகை ராதிகா என பலர் புகழ்ந்து பேசினார்கள். நயனும் தன்னுடைய முந்தைய காதல் தோல்விகள், தனது கணவர் விக்னேஷ் பற்றியும் நிறைய விஷயங்களை பேசியிருந்தார். இருந்தாலும் அந்த ஆவணப் படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது.

மூன்று நொடி வீடியோ: இதற்கிடையே இந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷிடம் விக்கியும், நயன்தாராவும் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவர் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தின் காட்சிகள் ரொம்ப முக்கியம் என்பதால் மூன்று நொடிகள் மட்டும் வரக்கூடிய ஃபுட்டேஜை இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் வைத்தார்கள். அது தனுஷுக்கு தெரியவந்ததை அடுத்து பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸை நயன்தாராவுக்கு அனுப்பியிருந்தார்.

மரியாதையே போய்விட்டது: அதனையடுத்து தனுஷை கண்டித்து மூன்று பக்க அளவில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார் லேடி சூப்பர் ஸ்டார். சூழல் இப்படி இருக்க இந்த ஆவணப் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை வருகின்றன. அதனைக் கண்ட ரசிகர்களோ தனுஷ் பத்து கோடி ரூபாய் கேட்டதாக நயன் கதறுகிறார். ஆனால் தனுஷ் அனுமதி கொடுக்காமல் இருந்தும்; 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் BTS காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம். இதனால் தன் மீது ரசிகர்கள் வைத்திருந்த மரியாதையை அவரே கெடுத்துக்கொண்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X