கழுத்துக்கு கீழே கேமரா.. ராஷ்மிகா, ஸ்ரீலீலாவை தலையில் தூக்கி வைத்து ஆடும் அல்லு அர்ஜுன்.. ஏன்?

சென்னை: புஷ்பா 2 படத்தில் பெண்களின் ஆடையை தொட்டாலே கடித்துக் குதறும் ஹீரோவாக சுகுமார் கதையை வைத்துவிட்டு ராஷ்மிகா மந்தனாவின் ஆடைகளை இப்படி ஒட்டுமொத்தமாக உருவி பாடல் காட்சிகளில் நடிக்க வைக்கலாமா? என படத்தை யு/ஏ சான்றிதழை நம்பி குடும்பத்துடன் பார்த்த ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பொதுமக்களே சொல்லிய நிலையில், அவர்கள் எல்லாம் வன்மத்தை கொட்டினார்கள் என்றும் அந்த தாத்தா ஒருவரை வலைவீசி படக்குழு தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

pushpa 2 rashmika mandanna allu arjun 2

தியேட்டர்களில் பப்ளிக் விமர்சனத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் 3 நாட்கள் வரை புதிய படங்களுக்கு விமர்சனங்கள் கூடாது என நீதிமன்றம் வரை சென்று மொக்கை வாங்கிய நிலையில், இன்று வெளியான புஷ்பா 2 படத்துக்கு அனைத்து இடங்களிலும் மீண்டும் பப்ளிக் ரிவ்யூ களைகட்டி உள்ளது.

கலவையான விமர்சனங்கள்: கங்குவா படத்துக்கு வந்தது போல கடுமையான விமர்சனங்கள் புஷ்பா 2 படத்துக்கு வரவில்லை என்றாலும், அனைத்து ரசிகர்களையும் முழுமையாக இந்த படம் கவரவில்லை என்பது ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பார்த்தாலே தெரிகிறது. அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு 3 மணி நேரம் 20 நிமிட நீள புஷ்பா 2 படத்தையும் உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. ஆனால், படம் முழுக்கவே ஆன் அண்ட் ஆஃப் ஆகவே இருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளையும் பப்ளிக் விமர்சனத்தில் அடுக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 800 தியேட்டர்களில் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய்யின் கோட் படத்தை போலவே இங்கேயும் வரவேற்பு கிடைக்குமா? என்பது முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

pushpa 2 rashmika mandanna allu arjun 2

பெண்களை கவர் செய்த புஷ்பா 2: புஷ்பா 2 படத்தில் பெண்ணின் மானத்தைக் காக்க கங்கம்மாவாக அல்லு அர்ஜுன் காளியாட்டம் ஆடியிருப்பது நிச்சயம் பெண்களை கவர்ந்து விடும். மனைவி போட்டோ கேட்டதால் ஆந்திராவில் ஆட்சி மாற்றத்தையே அல்லு அர்ஜுன் நடத்துகிறார் என கதையே பெண்ணை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொண்டாட்டி பேச்சைக் கேட்டால் வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும் என்கிற வசனத்தில் பயணிக்கும் கதையெல்லாம் பெண்கள் கூட்டத்தை தியேட்டருக்கு கூட்டி வந்துவிடும். சேலை கட்டி கங்கம்மாவாக பெண் குழந்தை வேண்டும் என அல்லு அர்ஜுன் பிச்சை எடுக்கும் காட்சியை தியேட்டரில் எத்தனை தடவை வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். ஓடிடி ரிலீஸ் பிப்ரவரி மாதம் தான் என்பதால் ரசிகர்கள் அதுவரை காத்திருக்க வாய்ப்பில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

pushpa 2 rashmika mandanna allu arjun 2

தலையில் தூக்கி வச்சு ஆடுறாரு: புஷ்பா 2 படத்திற்காக நடன இயக்குநர்களுக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீலிங்ஸ் பாடலில் ராஷ்மிகா மந்தனாவை அல்லு அர்ஜுன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார். அதே போல ஸ்ரீலீலாவையும் தூக்கி வைத்துக் கொண்டு கிஸ்ஸிக் பாடலில் வெறித்தனமாக ஆடுகிறார். அல்லு அர்ஜுனுக்கு இணையாக அந்த 2 இரண்டு நடிகைகளும் ரொம்பவே மெனக்கெட்டு ஆடி கிளாமரை எதிர்பார்த்து வந்த இளைஞர்களுக்கு கவர்ச்சி தீனிப் போட்டுள்ளனர்.

pushpa 2 rashmika mandanna allu arjun 2

கழுத்துக்கு கீழே கேமரா: புஷ்பா படத்திலேயே காரில் அல்லு அர்ஜுனுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே நடந்த அந்த ஆபாசக் காட்சியை ரசிகர்கள் கண்டித்த நிலையில், ஒரு சில நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் இருந்து படக்குழு நீக்கியது. இந்நிலையில், பீலிங்ஸ் பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் கழுத்துக்கு கீழேயே கேமராவை வைத்து படுமோசமாக படத்தை எடுத்திருக்கிறார் சுகுமார் என ஃபேமிலி ஆடியன்ஸ் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அனிமல் படத்தில் எந்தளவுக்கு ஆபாசக் காட்சிகள் காட்டி படத்தை ஹிட் ஆக்கினார்கள் என தெரியுமா? என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பதிலுக்கு பாடலில் உள்ள கிளாமரை எல்லாம் கண்டுக்கொள்ளக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.

pushpa 2 rashmika mandanna allu arjun 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X