உலகமே கொரோனா பீதியில முடங்கிக் கிடக்கு..டான்ஸாம் டான்ஸ்..! நடிகை ஸ்ரேயாவை அப்படி விளாசும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள புதிய நடன வீடியோவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Recommended Video

Vaathi Coming #QuarantineDance | Lock Down | Celebrity Quarantine

தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.

இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

கொரோனா

கொரோனா

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஊரடங்கு

ஊரடங்கு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. அதனால் அவர்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

பார்சிலோனா

பார்சிலோனா

அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, டிவி தொடர், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, தனது கணவருடன் பார்சிலோனாவில் இருக்கிறார். அங்கிருந்து அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

திருமணம் செய்தேன்

திருமணம் செய்தேன்

கடந்த சில நாட்களுக்கு முன், டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆங்கில பாடலுக்கு பால்கனியில் நின்றுகொண்டு டான்ஸ் ஆட, அவர் கணவர் வீடியோவாக எடுத்துள்ளார். அது வைரலானது. இதையடுத்து கணவர் பாத்திரம் தேய்க்கும் வீடியோவை பதிவிட்ட ஸ்ரேயா, இதற்காகத்தான் இவரைத் திருமணம் செய்தேன் என்று கூறியிருந்தார்.

ரணகள டான்ஸ்

இந்நிலையில், இப்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பால்கனியில் நின்று கணவருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறார். மற்றொரு நாட்டுப்புறப் பாடலுக்கு அவர் மட்டும் ஆடுகிறார். இதற்கு ரசிகர்கள் ஏராளமான கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். டான்ஸ் ரணகளமாக இருந்தாலும் உலகமே கொரோனாவுல செத்துட்டு இருக்கும்போது இது தேவையா? என்று சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.

மெச்சூரிட்டி

மெச்சூரிட்டி

ஆட்டமெல்லாம் சரி, ஸ்பெயின்ல ஓவரா அலையுதாம் கொரோனா, மாஸ்க்காவது போட்டுக்கோங்க என்று சிலர் அட்வைஸ் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அவரை கடுமையாகத் திட்டியுள்ளனர். சும்மா சும்மா ஆடிட்டே இருக்கீங்களே, கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் வேண்டாம்' என்று சிலர், கொஞ்சமாவது மெச்சூரிட்டியோட நடத்துக்குங்க என்றும் கூறியுள்ளனர். இன்னும் கேவலமாகத் திட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X