காளஹஸ்தியில் காஜல்... திரண்டனர் பக்த ரசிகர்கள்!

By Shankar

காளஹஸ்தி: காளஹஸ்தி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த நடிகை காஜல் அகர்வாலைக் காண குவிந்தனர் அங்கு வந்திருந்த பக்த கோடிகள்.

அறிமுகமானது தமிழில் என்றாலும் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் காஜல் அகர்வாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இன்னும் அவரது மகதீரா மவுசு குறையவே இல்லை.

ஜில்லா

ஜில்லா

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் காஜலுக்கு, அடுத்தடுத்து படங்கள் சரியாக அமையவில்லை. விஜய்யுடன் அவர் நடித்த ஜில்லா கூட பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

இரு புதிய படங்கள்

இரு புதிய படங்கள்

ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி மோகன் இயக்கும் தமிழ் படத்திலும் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காளஹஸ்தியில்

காளஹஸ்தியில்

இந்த நிலையில் அவர் இன்று ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தனது குடும்பத்தினரும்டன் சிவன் கோவிலுக்கு திடீரென வந்த அவர், அங்கு ராகு கேது பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவிலை சுற்றி வந்தும் வணங்கினார்.

திருமணம்

திருமணம்

சமீபத்தில் இவரது தங்கை திருமணத்தையும் முடித்தார். அடுத்து காஜல்அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த தரிசனம் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

பக்தகோடிகள்

பக்தகோடிகள்

காஜல்அகர்வாலை காண பக்தர்கள் ஏராளமாகத் திரண்டனர். ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தார்கள். ஆனால் அவர் யாருக்கும் ஆட்டோகிராப் போடவில்லை. பக்தகோடிகளைப் பார்த்து சிரித்தபடி கையசைத்து விட்டு காரில் ஏறிப் பறந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X