திரிஷா பாவம்.. என்ன மணி சார் இது?.. தக் லைஃப் முத்த மழை பாடல் வீடியோ.. விட்டு விளாசும் ரசிகர்கள்

சென்னை: மணிரத்னம் இயக்கி கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் அண்மையில் வெளியானது. படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்த ரசிகர்கள் படத்தை பார்த்த பிறகு கழுவி கழுவி ஊற்றினார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் பலத்த அடியை வாங்கியது. மேலும் முத்த மழை பாடலை படத்தில் வைக்காததற்கும் காண்டான ரசிகர்கள்; இப்போது அந்தப் பாடலின் வீடியோவையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

மணிரத்னமும், கமலும் இணைந்து நாயகன் என்ற சூப்பர் திரைப்படத்தை கொடுத்ததன் காரணமாக; அவர்கள் மீண்டும் இணையப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வ்ந்ததும் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. கண்டிப்பாக் நாயகன் போன்றொரு படத்தைத்தான் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைத்தபோதே கொஞ்சம் யோசித்த ரசிகர்கள்; இந்தக் காலத்துக்கு ஏற்ற படத்தை தருவார்கள் என்று நம்பினார்கள்.

பிரமாண்ட ரிலீஸ்: படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லாம் அந்த நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தியது. படமும் கர்நாடக மாநிலம் தவிர்த்து மற்ற இடங்களில் ரிலீஸானது. அதீத ஆர்வத்துடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரத பழசான கதையை எந்தப் புதுமையும் இல்லாமல் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்; டிக்கெட்டுக்கு கொடுத்த பணம் எல்லாம் வேஸ்ட்தான் என்று ஓபனாகவே அடிக்க் ஆரம்பித்தார்கள். வசூல் ரீதியாக படம் தப்பிக்கும் என்று பார்த்தால் அங்கும் பலத்த அடிதான்.

சர்ச்சையான கதை: இந்தக் கதையை எழுதியது கமல்ஹாசன் என்பது அனைவருக்கும் தெரியும். வளர்ப்பு மகனுக்கும், தந்தைக்கும் இடையே இருக்கும் பகைதான் கதை என்ற ஒரு பக்கம் இருந்தாலும்; அந்தப் பகை ஒரு பெண்ணுக்காக என்று சென்றது படம். அதனைப் பார்த்த ரசிகர்களோ இவர்கள் என்ன சிந்து சமவெளி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் கடுமையாக ட்ரோல் செய்தார்கள். ஏற்கனவே இந்தியன் 2 ட்ரோலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

Fans troll Trisha and Mani Ratnam after watching the video of the song Mutha Mazhai from the movie Thug Life
Photo Credit:

திரிஷாவின் கேரக்டர்: அனைத்துக்கும் மேலே இப்படத்தில் திரிஷாவின் கேரக்டரைத்தான் பலரும் அதிகம் விமர்சித்தார்கள். அதுமட்டுமின்றி அவருடைய ரசிகர்களோ எதற்காக இந்த மாதிரி கதையில் நடிக்க வேண்டும் என நொந்துகொண்டு; இப்போதைக்கு தமிழில் டாப் ஹீரோயினாக இருக்கிறார்; அவர் இனி இப்படி நடிக்க வேண்டாமே என்று அட்வைஸ் எல்லாம் செய்தார்கள். அதேசமயம் இதுமாதிரி நடிப்பதற்கு பெரிய கட்ஸ் வேண்டும் என்றும் ஒருதரப்பினர் ஆதரவும் கொடுத்தார்கள்.

முத்த மழை: இதற்கிடையே படத்தின் பெரிய ஹைலைட்டாக மாறியது முத்த மழை பாடல். அதாவது தமிழில் தீ பாடியதைவிட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியது மிகப்பெரிய ட்ரெண்டானது. எனவே அவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் உயர்ந்தன. கண்டிப்பாக இந்தப் பாடல் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு அந்தப் பாடலை படத்தில் வைக்காமல் ஷாக் கொடுத்திருந்தார் மணி. இதுவும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

மொத்தமா போச்சு: அதுமட்டுமின்றி அந்தப் பாடலை படத்தில் வைத்திருந்தால் என்ன குறைச்சல் என மணிரத்னத்தை விமர்சிக்கவும் செய்தார்கள். இந்நிலையில் முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. தீ பாடிய வெர்ஷனில் வெளியான வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன மணி சார் இது. தீயின் குரலுக்கும் திரிஷாவுக்கும் ஒத்தே வரவில்லை. எப்படி இதை ஷூட் செய்தீர்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவ்ருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் திரிஷாவிடம் ஒரு எக்ஸ்பிரஷ்னுமே இல்லை; ஏதோ கடமைக்கு இந்தப் பாடலில் நடித்தது போலல்லவா இருக்கிறது என்று கிண்டல் செய்யும் அவர்கள்; இதை படத்தில் வைக்காமல் இருந்ததே நல்லதுதான்; உண்மையில் திரிஷா பாவம்தான் இப்படி வந்து மாட்டியிருக்கிறாரே எனவும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X