மீண்டும் பூஜா ஹெக்டேவுக்கு பல்பா?.. அப்போ அடுத்த வருஷம் ஜன நாயகன் நிலைமை என்ன ஆகப்போகுதோ?
சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருவதாக ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் தொடர்ந்து விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டேவின் அழகுக்கும் அவரது நடிப்புத் திறமைக்கும் ஏற்ப பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஆனால், அவரது துரதிர்ஷ்டம் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் சமீப காலமாக தோல்வியை தழுவி வருகின்றன. ஆனால், இந்த முறை சூர்யாவின் ரெட்ரோ படத்தின் மூலம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் வெற்றியை பூஜா ஹெக்டே ருசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் லெக் தாதாவாக மாறிவிட்டார் பூஜா ஹெக்டே என அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக இந்த ஆண்டு இந்தியில் பூஜா ஹெக்டே நடித்து வெளியான தேவா திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தொடர் தோல்வி: மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், அவருக்கு முதல் படமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து பாலிவுட்டில் நடித்த மொகஞ்சதாரோ படமும் ஃபிளாப் ஆனது. பல வருடங்கள் கழித்து மீண்டும் பூஜா ஹெக்டே தமிழில் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் ரிசல்ட்டும் ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், இந்த ஆண்டு சூர்யாவுடன் ஜோடி போட்டு பூஜா ஹெக்டே ஆடிய கனிமா பாடல் ஹிட் அடித்த நிலையில், படம் பெரிதாக ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என கலவையான விமர்சனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.
லெக் தாதாவா பூஜா ஹெக்டே?: நெட்டிசன்கள் எல்லையை மீறி கால் அழகி நடிகை பூஜா ஹெக்டேவை லெக் தாதா என்றே செந்தில் காமெடியை வைத்து கலாய்த்து வருகின்றனர். இந்த படத்திற்கு பூஜா ஹெக்டேவை ராதே ஷ்யாம் படத்தில் அவர் நடித்த நடிப்பை பார்த்து தேர்வு செய்ததாக கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், அந்த படமே அவரால் தான் ஃபிளாப் என்றும் அவரையே ஏன் மீண்டும் கூட்டி வந்து சூர்யா அண்ணன் சோலியை முடிச்சி விட்டீங்க என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
பூஜா ஹெக்டே மீது தவறு இருக்கா?: ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள் எல்லாம் 500 கோடி, 1000 கோடி என வசூல் செய்கிறது. ஆனால், நடிகை பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் ஏன் தொடர்ந்து சொதப்புகின்றன என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரெட்ரோ படத்தில் பழைய படங்களில் வரும் நாயகியாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். கவர்ச்சிப்புயலான பூஜா ஹெக்டே ஒட்டுமொத்தமாக கன்ட்ரோல் உடன் கடைசி வரை சேலை மற்றும் ஹோம்லியான உடைகளை அணிந்துக் கொண்டு கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு ருக்மணியாக நடித்து அசத்தியுள்ளார். இயக்குநர்கள் சொதப்புவதற்கு பாவம் பூஜா ஹெக்டே என்ன செய்வார் என அவரது ரசிகர்கள் இன்னமும் ஸ்ட்ராங்காக சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ஜன நாயகன் நிலைமை?: அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம், பீஸ்ட், கிஸி கா பாய் கிஸி கி ஜான், ஆச்சார்யா, தேவா என பல படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், ரெட்ரோ படமும் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியவில்லை என்றும் இந்த படம் லாபத்தை ஈட்டி விடும் அதில் சந்தேகமில்லை. ஆனால், மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படமாக மாறுமா? என்றால் மக்கள் இந்த படத்தை கொண்டாடுவதை பொறுத்து தான் உள்ளது என்கின்றனர். மேலும், பூஜா ஹெக்டே அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படம் என்ன ஆகுமோ என இப்பவே ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்ட்னார். ஹலமிதி ஹபிபோ, கனிமா மாதிரி ஒரு பாடல் ஹிட்டாவது உறுதி என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











