ஜோதிகாவுக்கு நேரம் சரியில்லை போல.. சிம்ரனை வைத்து ஆரம்பித்தது புது பஞ்சாயத்து
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சிம்ரன். கோலிவுட் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கோலோச்சிய அவர்; இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் பேசிய பேச்சு ரசிகர்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் சிம்ரன்.ஹிந்தி திரையுலகில் தனது தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த அவர் தமிழில் நேருக்கு நேர் படத்தில் நடிக்க முதன்முதலாக கமிட்டானார். அதேசமயத்தில் ஒன்ஸ்மோர், விஐபி ஆகிய படங்களிலும் கமிட்டாகி நடித்தார். இந்தப் படங்களில் ஒன்ஸ்மோர் திரைப்படம் முதலில் வெளியானதால் அதுதான் தமிழில் அவரது முதல் படமாக கருதப்படுகிறது. தான் கமிட்டான முதல் மூன்று படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
முன்னணி நடிகை: தொடர்ந்து அவருக்கு தமிழில் வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனையடுத்து கமல் ஹாசன், விஜய், அஜித், பிரசாந்த் என டாப் ஹீரோக்களுடன் நடித்தார். எத்தனை ஹீரோக்களுடன் நடித்தாலும் அசால்ட்டாக சிம்ரன் தனக்கு கொடுக்கப்பட்ட ரோல்களில் ஸ்கோர் செய்துகொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் தமிழில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையழகி சிம்ரன்: முக்கியமாக சிம்ரனின் இடைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இருந்தது. அதுமட்டுமின்றி அவருடன் நடித்த நடிகைகள் முதற்கொண்டு இப்போது நடிக்கும் நடிகைகள்வரை சிம்ரன் மாதிரி ஆக வேண்டும் என்றே தங்களுக்குள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எதார்த்தம். அந்த அளவுக்கு அவர் தனது தாக்கத்தை மிக அழுத்தமாக பதித்துவிட்டிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

எந்த ரோலாக இருந்தாலும் கிங்தான்: சிம்ரனை பொறுத்தவரை அவர் கிளாமர் ரோலுக்கு மட்டும்தான் பொருத்தம் என்று சொல்லிவிட முடியாது. அவரால் கிளாமராகவும் நடிக்க முடியும், ஹோம்லி ரோலிலும் நடிக்க முடியும். அதற்கு உதாரணமாக ப்ரியமானவளே, அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும், கன்னத்தில் முத்தமிட்டால் என சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது திறமையை நிரூபித்திருந்த அவர் அங்கும் பெரிய ரவுண்டு வந்தார்.
திருமணம் செய்துகொண்ட சிம்ரன்: அவர் பீக்கில் இருக்கும்போது நடன அமைப்பாளர் ராஜு சுந்தரத்தை காதலித்தார். ஆனால் அந்தக் காதல் பாதியிலேயே முடிந்தது. பிறகு சில நடிகர்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். சூழல் இப்படி இருக்க அவர் தனது பால்ய கால நண்பரையே காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இதனையடுத்து வாரணம் ஆயிரம் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார் அவர். தற்போது பிஸியாக நடித்துவரும் அவர்; டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
சிம்ரனின் பேச்சு: இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், "என்னுடைய சக நடிகைக்கு ஒருமுறை, 'உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது' என்று மெசேஜ் செய்தேன். உடனே அவர் ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிட இந்த ரோல் சிறந்தது என்று ரிப்ளை செய்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. 20,25 வயதுக்காரர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது கருத்து. நான் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் எப்போதோ நடித்துவிட்டேன். என்னை பொறுத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதைவிடவும் ஆண்ட்டி ரோலில் நடிக்கலாம்" என்று சொல்லியிருந்தார்.
ஜோதிகாதான் அந்த நடிகையா?: சிம்ரனின் இந்தப் பேச்சை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகை யாராக இருக்கும் என்று ஆராய்ச்சியில் இறங்கினார். அவர்களில் ஒருதரப்பினரோ, 'கண்டிப்பாக அந்த நடிகை ஜோதிகாவாகத்தான் இருக்கும். ஏனெனில் சிம்ரன் தனது பேச்சி டப்பா ரோல் என்ற ஒரு சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். ஜோதான் சமீபத்தில் டப்பா கார்ட்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்தார் என குறிப்பிட்டு; ஒருவேளை சிம்ரன் மறைமுகமாக சொல்வது ஜோதிகாவைத்தான் என்றால் ஜோ அப்படி சொல்லியிருக்கவே கூடாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











