twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்கம்மா...: எம்.எல்.ஏ.வை விமர்சித்து ட்விட்டரில் அசிங்கப்பட்ட இளம் நடிகை

    By Siva
    |

    மும்பை: சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வை விமர்சித்து ட்வீட்டிய பாலிவுட் நடிகை இஷா குப்தாவை எம்.எல்.ஏ.வின் மகன் அசிங்கப்படுத்தியுள்ளார்.

    பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவருமான அபு அஸ்மி, சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கி எறும்பு வரத் தான் செய்யும் என்றார்.

    அபு அஸ்மியின் கருத்தை கேட்ட பாலிவுட் நடிகை இஷா குப்தாவுக்கு கோபம் வந்துவிட்டது.

    இஷா குப்தா

    அபு அஸ்மி உங்களை போன்ற முட்டாளை பெற்றெடுத்த பெண்ணை தான் குறை கூற வேண்டும். அதை நினைத்து அவரே நொந்திருப்பார் என நடிகை இஷா ட்வீட்டினார்.

    ஃபர்ஹான் அஸ்மி

    இஷாவின் ட்வீட்டை பார்த்த அபு அஸ்மியின் மகனும், நடிகை ஆயிஷா தாக்கியாவின் கணவருமான ஃபர்ஹான் கூறியிருப்பதாவது, இஷா அபு அஸ்மியை பெற்றெடுத்தது என் பாட்டி. அவர் உயிருடன் இல்லை. அவர் உங்களை விட பல மடங்கு கண்ணியமானவர் என பதிலுக்கு ட்வீட்டியுள்ளார்.

    வெட்கக்கேடு

    அபு அஸ்மி பற்றி பேசிய இஷா பற்றி சமாஜ்வாடி கட்சி நிர்வாகி அமித் பிரகாஷ் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இஷா முதலில் உங்களின் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அபு அஸ்மி பற்றி பேச உங்களுக்கு தகுதி உள்ளதா என்று கூறுங்கள். வெட்கக்கேடு என தெரிவித்துள்ளார்.

    ஆபாசம்

    படங்களில் உடலை காட்டி ஆபாசமாக நடிப்பது அதன்பிறகு பெரிய இது போன்று பெண்கள் முன்னேற்றத்தின் பிராண்ட் அம்பாசிடர் போன்று காண்பித்துக் கொள்வது என்று இஷாவை ஒருவர் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

    English summary
    Politician Abu Azmi's son Farhan Azmi slutshamed Bollywood actress Esha Gupta who took to twitter to slam his MLA father.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X