தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்க கூப்டுறாங்க.. பகீர் கிளப்பிய தங்கல் பட ஹீரோயின்.. படு கேவலம்!
மும்பை: அமீர்கானின் மகளாக தங்கல் படத்தில் நடித்தவர் தான் பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்திலேயே இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளிலேயே ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்துள்ள இவர் திடீரென சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த காஸ்டிங் கோச் அனுபவத்தை பேசி பகீர் கிளப்பியுள்ளார்.
நடிகர் அமீர்கான் தனது 2வது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த போது அவர் அடுத்ததாக நடிகை பாத்திமா சனா ஷேக்கைத்தான் திருமணம் செய்யப் போகிறார் என 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏகப்பட்ட பாலிவுட் மீடியாக்கள் வதந்திகளை கிளப்பினர்.

ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு சம்பவமும் அரங்கேறவில்லை. நடிகர் அமீர்கான் 3வது திருமணம் செய்துக் கொள்ளும் முடிவுக்கே வரவில்லை எனக் கூறுகின்றனர். அதே போல 33 வயதாகும் நடிகை பாத்திமா சனா ஷேக்கும் இதுவரை யாரையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கல் நாயகி: இந்திய சினிமாவில் முதன்முறையாக 2000 கோடி வசூலை ஈட்டி மாஸ் காட்டிய பாலிவுட் படமான தங்கல் படத்தில் கீதா போகத் எனும் ரியல் லைஃப் மல்யுத்த வீராங்கனையின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மாஸ் காட்டியவர் தான் பாத்திமா சனா ஷேக். அந்த படத்தில் அமீர்கான் அப்பாவாக நடித்த நிலையில், அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்திலும் பாத்திமா சனா ஷேக்குக்கு ஹீரோயின் ரோல் வழங்கப்பட்ட நிலையில் தான் அந்த வதந்திகள் எல்லாம் கிளம்பின.
பாலியல் குற்றச்சாட்டு: பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை பாத்திமா சனா ஷேக் ஏன் தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகம் நடிப்பதில்லை என்கிற கேள்விக்கு சில சவுத் தயாரிப்பாளர்கள் தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றனர் என்றும் படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் போதே படுக்கைக்கு அழைக்கும் விதமாக பேசுகின்றனர். அதனாலே பல படங்களை தவிர்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் அசிங்கம்: நடிகை பாத்திமா சனா ஷேக் தங்கல் படத்திற்கு முன்னதாக தெலுங்கில் 'நின்னு நேனு ஒக்கட்டவுடம்' எனும் படத்தில் 2015ம் ஆண்டு நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர் தென்னிந்தியாவில் எந்தவொரு படத்திலுமே நடிக்கவில்லை. இந்நிலையில், சவுத் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக பேசிய அவர், குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள சினிமா பிரபலங்களை குறிப்பிட்டு பேசியது ஷாக்கை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











