»   »  புனித ரமலானில் நீச்சல் உடையா, வெட்கமா இல்ல: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

புனித ரமலானில் நீச்சல் உடையா, வெட்கமா இல்ல: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரமலான் மாதத்தில் நீச்சல் உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை பாத்திமா சனா சேக்கை ஆளாளுக்கு விளாசி வருகிறார்கள்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானவர் பாத்திமா சனா சேக். கடந்த ஆண்டு வெளியான தங்கல் படத்தில் ஆமீர் கானின் மூத்த மகளாக நடித்திருந்தார்.

தங்கல் படம் மூலம் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

நீச்சல் உடை

பாத்திமா சனா சேக் மால்டா கடற்கரையில் நீச்சல் உடையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள் முஸ்லீமாக இருந்து கொண்டு ரமலான் மாதத்தில் இப்படியா போஸ் கொடுப்பது என்று அவரை விளாசி வருகிறார்கள்.

ரமலான்

ரமலான் மாதம். குறைந்தபட்சம் புனித மாதத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று ஒருவர் பாத்திமாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் போட்டுள்ளார்.

வெட்கம்

வெட்கம்

ரமலான் மாதத்தில் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் பாத்திமா. உங்களுக்கு வெட்கமா இல்லையா என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதரவு

ஆதரவு

ஒரு முஸ்லீம் பெண் ரமலான் மாதத்தில் நீச்சல் உடை அணிந்ததற்காக விளாசுகிறார்கள் ஆனால் அதே புனித மாதத்தில் அப்பாவி மக்களை கொல்வது மட்டும் சரியோ என்று ஒருவர் பாத்திமாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Netizens are trolling Dangal girl Fatima Sana Shaikh for wearing swimsuit in the holy month of Ramadan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil