நீங்கதான் பர்ஸ்ட்..தானாக முன் வந்து உதவிய தனுஷ் ஹீரோயின்.. பாராட்டித் தள்ளிய சினிமா தொழிலாளர்கள்!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு தானாக முன் வந்து உதவி செய்த நடிகையை, தொழிலாளர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
Recommended Video
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த படம், ஆக்ஷன். இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜகமே தந்திரம் என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்
மலையாளத்தில் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஊரடங்கு
இதில் பூங்குழலி கேரக்டரில் அவர் நடிக்கிறார். இதற்காக, படகு ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. தாய்லாந்தில் நடந்த இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார். கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளளன. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்
ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டியது. தெலுங்கிலும் சினிமா தொழிலாளர்களுக்காக நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் நிதி
இந்நிலையில் கேரளாவிலும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. கேரளத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (பெஃப்கா) இதற்கான நிதியை திரட்டி வருகிறது. இதற்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி உதவி செய்துள்ளார். இதையடுத்து பெஃப்கா தனது பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பாராட்டியுள்ளது.

பாராட்டு
'இளம் தலைமுறை நடிகர், நடிகைகளில் தானாக முன் வந்து நிதி அளித்த ஒரே நடிகையும் முதல் நடிகையும் ஐஸ்வர்யா லட்சுமிதான். மம்மூட்டி, மோகன்லால், மஞ்சுவாரியர் போல அவரும் தானாகவே அழைத்து நிதி உதவி அளித்துள்ளார்' என்று பாராட்டியுள்ளது. உதவி இயக்குனர்கள் உட்பட 19 அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











