பஞ்சரான பராசக்தி ஹீரோயின்.. பீரியட்ஸ் பத்தி பேசி மாட்டிக்கிட்ட ஸ்ரீலீலா.. பெண்களே பொளக்குறாங்களே!

சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபுவு, அல்லு அர்ஜுன் என பெரிய நட்சத்திரங்கள் உடன் இணைந்து நடித்த ஸ்ரீலீலா தமிழில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அடுத்து தனுஷ், சாய் பல்லவி நடித்து வரும் ராஜ்குமார் பெரியசாமி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பெண்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'மாதவிடாய்' பற்றி பேசினார்.

Female Fans slams Sreeleela on her recent Periods pain topic

ஆனால், அவரது பேச்சு சோஷியல் மீடியாவில் அவருக்கு எதிராகவே மாறும் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். பல பெண்களே டாக்டரும் நடிகையுமான ஸ்ரீலீலாவுக்கு கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லை என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

டாக்டர் பட்டம் பெற்ற ஸ்ரீலீலா: நடிகை ஸ்ரீலீலாவுக்கு 24 வயது தான் ஆகிறது. மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் தான் மருத்துவ படிப்பை முடித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார். கடந்த சில வருடங்களாக பல பெரிய படங்களில் நடித்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார் இளம் நடிகை ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும், இவருக்கு பாலிவுட்டில் சில பட வாய்ப்புகளும் கோலிவுட்டில் தனுஷ் படத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

மாதவிடாயை பெரிது படுத்தக்கூடாது: சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆண்களுக்கும் மாதவிடாய் வரணும், அப்போ தான் பெண்கள் அனுபவிக்கும் வலி அவர்களுக்கு புரியும் என்று பேசினார். பவன் கல்யாண் உடன் இணைந்து நடித்த உஸ்தாத் பகத் சிங் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ஸ்ரீலீலா, பெண்கள் மாதவிடாயை எல்லாம் ஒரு சாக்கு போக்காக சொல்லக் கூடாது. என்னோட பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அந்த பாடலுக்கு நான் என்னோட பீரியட்ஸ் காலங்களில் தான் அதிகம் நடனமாடியுள்ளேன். ஆணும் பெண்ணும் சமம் என சமத்துவம் பேசும் போது, பெண்கள் மாதவிடாயை ஒரு பெரிய பிரச்னையாக பார்க்கக் கூடாது என்றார்.

திட்டும் பெண்கள்: அனைத்து சொகுசு வசதிகளுடன் இருக்கும் நடிகைக்கு கண்டிப்பாக மாதவிடாய் பிரச்னைகளை சந்திக்கும் சாமானிய பெண்களின் வலி புரியுமா என்று தெரியவில்லை என்றும் உங்களால் ஆட முடிகிறது, குதிக்க முடிகிறது என்றால் மற்ற பெண்களும் ஆட வேண்டும், குதிக்க வேண்டும் என சொல்வது சரி கிடையாது. மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான வலி இருக்கும் என இளம் பெண் ஒருவரே சோஷியல் மீடியாவில் ஸ்ரீலீலாவை விளாசியுள்ளார். மேலும், ஏகப்பட்ட பெண்கள், உனக்கு தெரியாத டாப்பிக்கை எடுத்து ஏன் பேசுகிறாய் என்றும் முதலில் பொதுப்படையாக இந்த விஷயத்தை சிறுமைப்படுத்துவதே தவறு என திட்டித் தீர்த்து வருகின்றனர். சில பெண்கள் ஸ்ரீலீலா சொல்ல வந்த நோக்கமே வேறு என்றும் எதுவாக இருந்தாலும் பெண்கள் தாங்கிக் கொண்டு இன்னமும் முன்னேற வேண்டும் என்றே சொல்ல வந்தார் என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X